திருமாவளவன் 47வது பிறந்த நாள்: கருணாநிதியிடம் ஆசி
Subscribe to Oneindia Tamil

தமிழகத்தின் முதன்மையான தலித் கட்சியாக திகழும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு இன்று 47வது பிறந்த நாளாகும்.
இதையடுத்து இன்று காலை அவர் கோபாலபுரத்தில் உள்ள முதல்வர் கருணாநிதியின் இல்லத்திற்குச் சென்றார். அங்கு முதல்வருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். திருமாவளவனை முதல்வர் கருணாநிதி வாழ்த்தி ஆசிர்வதித்தார்.
பின்னர் அம்பேத்கர் நினைவிடத்திற்குச் சென்ற திருமாவளவன் அங்கு மலரஞ்சலி செலுத்தினார். திருமாவளவனின் பிறந்த நாளையொட்டி இன்று மாலை சென்னை தீவுத் திடலில் பிரமாண்ட பொதுக் கூட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏற்பாடு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications