மோனிகா தேவிக்கு ஆதரவாக மணிப்பூரில் பந்த்

நாளை காலை 5 மணிக்கு இந்த பந்த் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொள்வதாக இருந்த ஒரே பளு தூக்கும் வீராங்கனை மோனிகா தேவி மட்டுமே. ஆனால் கடைசி நேரத்தில் ஊக்க மருந்து உட்கொண்டதாக கூறி அவரை தடை செய்து விட்டது இந்திய விளையாட்டு ஆணையகம். இருப்பினும் பின்னர் அவர் மீது எந்தக் குற்றமும் இல்லை என்றும் அது கூறியது. இருப்பினும் மோனிகாவால் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் போய் விட்டது.
இதைக் கண்டித்து மோனிகா தேவி சார்ந்த மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என மணிப்பூர் மாநில முதல்வர் இபோபி சிங் கோரிக்ைக விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக விரிவான விசாரணைக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் மோனிகா தேவி விவகாரத்தில் இந்திய விளையாட்டு ஆணையகத்தின் போக்கைக் கண்டித்து நாளை 24 மணி நேர பந்த் நடத்த போராட்டக் குழு அழைப்பு விடுத்துள்ளது.
இதற்கிடையே, இன்று இம்பால் வந்த மோனிகா தேவி அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், விளையாட்டை அரசியலுக்கு அப்பாற்பட்ட இடத்தில் வைக்க வேண்டும். கடுமையாக உழைத்து வெற்றிக்காகவும், சாதனைக்காகவும் காத்திருக்கும் வீரர், வீராங்கனைகள் இதுபோன்ற அழுக்கான அரசியலால் பாதிக்கப்படக் கூடாது என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications