ராமநாதபுரம்: அதிமுக பிரமுகர் காரில் வெடிபொருள்
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் வெடி பொருட்களுடன் சென்ற அதிமுக பிரமுகரின் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம்காத்தான் செக்போஸ்ட்டில் போலீசார் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஸ்கார்பியோ கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதையடுத்து போலீஸார் காரை விரட்டிச் சென்று பிடித்தனர். அப்போது காரில் இருந்தவர்கள் தப்பியோடினர்.
காரை சோதனை செய்தபோது அதில் 20 ஜெலட்டின் குச்சிகள், இரண்டு டெட்டனேட்டர், அரிவாள்கள், உருட்டைக்கட்டைகள் போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்தன. போலீஸார் அவற்றை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் காரிக்கூட்டத்தை சேர்ந்த அதிமுக ஒன்றிய இலக்கிய அணித் தலைவர் நூர் முகமதுவின் மகன் கஜினி முகமது தனதுச சகாக்களுடன் அந்த காரில் சென்றது தெரியவந்தது. மேலும், நிலம் தொடர்பான பிரச்சனையில் தனது உறவினர் கலில் ரகுமான் மகன் சுல்தானை கொலை செய்ய ஆயுதங்களுடன் சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து தலைமறைவான கஜினி முகமது அப்துல் சலாம், தமிழ்செல்வன், தமிழரசன், கார்த்திக், இளையராஜா ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.
-
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது












Click it and Unblock the Notifications