திமுக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்-ராமதாஸ் ஆதரவு
Subscribe to Oneindia Tamil

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாமக பொருளாளரும், வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குருவை இன்று சிறைக்குச் சென்று ராமதாஸ் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், காடுவெட்டி குரு மீதான வழக்கை நாங்கள் சட்டப்படி சந்திப்போம்.
திமுக அரசு மீது சட்டசபையில் பாமக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வராது. கம்யூனிஸ்ட் கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தால் அதை ஆதரிப்போம்.
அதிமுக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தால் அதுகுறித்து அப்போது பேசி முடிவெடுக்கப்படும் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications