சேது மாற்றுப் பாதை: டெல்லி அதிகாரிகள் ரகசிய ஆய்வு

தனுஷ்கோடி கடலில் அமைந்துள்ள ராமர் பால மணல் திட்டுகளை சேதப்படுத்தாமல், சேது சமுத்திரத் திட்ட கால்வாய் தோண்டுவது குறித்து ஆய்வு செய்யும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி மாற்று வழியை தேர்வு செய்ய ஆய்வு நடத்தும்படி சேது சமுத்திர திட்ட கழகத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து ராமேஸ்வரம் கோதண்டராமர் கோவில் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை தமிழக அரசு வழங்கிய 2,500 ஏக்கர் நிலத்தை சர்வே செய்யும் பணியில் வருவாய் மற்றும் நில அளவீட்டுத் துறையினர் கடந்த 2 நாட்களாக ஈடுபட்டுள்ளனர். சர்வே அடையாளமாக அப்பகுதியில் கொடிகளையும் நட்டு வைத்துள்ளனர்.
இந்நிலையில், மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து துறை செயலாளர் சர்மா தலைமையில் அதிகாரிகள் குழுவினர் டெல்லியில் இருந்து மண்டபத்துக்கு திடீரென்று வந்தனர். அங்கிருந்து கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட் கப்பலில் சென்று கோதண்டராமர் கோவில், தனுஷ்கோடி, அரிச்சல்முனை பகுதிகளை ஆய்வு பார்வையிட்டனர்.
சேது கால்வாய் தோண்டுவதற்கு மாற்றுப் பாதையான நான்காவது வழித்தடம் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்தனர். பின்னர் தனுஷ்கோடி கடலில் ராமர் பால மணல் திட்டு பகுதிகளையும் பார்வையிட்டனர்.
ரகசியமாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சேது சமுத்திர கப்பல் கால்வாய் திட்டக் கழக பொது மேலாளர் சீனிவாசக்கண்ணன், ராமநாதபுரம் கலெக்டர் கிர்லோஷ்குமார் உள்பட தமிழக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications