இங்கிலீஷ்-ஆங்கிலேயர்களை விட இந்தியர்கள் 'சூப்பர்'!
லண்டன்: ஆங்கிலத்தை தாய் மொழியாகக் கொண்ட பிரிட்டிஷ்காரர்களை விட இந்தியர்கள்தான் ஆங்கிலத்தை சிறப்பாக பேசுவதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் படித்து வரும் இந்திய மாணவர்கள் மற்றும் பிரிட்டிஷ் மாணவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டிஷ் மாணவ, மாணவியரை விட இந்திய மாணவ, மாணவியரின் ஆங்கில உச்சரிப்பும், ஆங்கில மொழியை கையாளும் திறமையும் சிறப்பாக உள்ளதாம்.
ஸ்பெல்லிங், உச்சரிப்பு, இலக்கண சுத்தம் இந்தியர்களிடம் சிறப்பாக உள்ளதாம். உண்மையில் ஆங்கிலத்தை குண்டக்க மண்டக்க பேசுவது பிரிட்டிஷ்காரர்கள்தானாம்.
ஆங்கிலத்தை அடிப்படை குலையாமல் இந்தியர்கள் பேசுகிறார்களாம். வகுப்பறைகளில் இந்தியா மற்றும் பிற நாடுகளின் மாணவ, மாணவியர் சிறப்பாக ஆங்கிலம் பேசுகிறார்கள். அதேசமயம், பிரிட்டிஷ் மாணவ, மாணவியரிடம் ஆங்கிலத்தில் முழுமை இல்லையாம்.
குறிப்பாக ஸ்பெல்லிங் மிஸ்டேக் செய்வது ஆங்கிலேயர்கள்தானாம். குறிப்பாக 'there' என்று சொல்வதற்குப் பதில் 'their' என்றும், 'whose' என்று சொல்வதற்குப் பதில் 'who's' என்றும், 'truly' என்று சொல்வதற்குப் பதில் 'truely' என்றும், 'occurred' என்று சொல்வதற்குப் பதில் 'occured' என்றும், 'speech' என்று சொல்வதற்குப் பதில் 'speach' என்றும் கூறுகிறார்களாம் ஆங்கிலேய மாணவர்கள்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் கூறுகையில், 2ம் ஆண்டு படிக்கும் பிரிட்டிஷ் மாணவ, மாணவியர் கூட ஆங்கிலத்தை சரிவர உச்சரித்துப் பேசுவதில்லை. மிகவும் மோசமான ஆங்கிலத்தையே அவர்கள் பேசுகிறார்கள். அவர்கள் எழுதுவதும் கூட தவறான ஆங்கிலம்தான்.
சில சமயங்களில் மாணவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதைக் கூட எங்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. அதேசமயம், இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு மாணவ, மாணவியர் தாங்கள் சொல்ல வருவதை தெளிவான ஆங்கிலத்தில் குறிப்பிடுகின்றனர் என்றார்.
பக்ஸ் நியூ பல்கலைக்கழக பேராசிரியர் கென் ஸ்மித் கூறுகையில், அடிப்படை இலக்கணத்தைக் கூட ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவ, மாணவியர் கடைப்பிடிப்பதில்லை. குறிப்பாக 'weird', 'seize', 'leisure' 'neighbour' போன்றவற்றின் ஸ்பெல்லிங்குகளை அவர்களால் சரியாக எழுதவோ, பேசவோ முடிவதில்லை என்கிறார்.
பிரிட்டிஷ் மாணவ, மாணவியரின் இந்த 'இங்கிலிபீஷ் திறமையைப்' பார்த்து பயந்து போயுள்ள சில பல்கலைக்கழகங்கள் தற்போது ஒரு வருட கால ஆங்கில டியூஷனுக்கும் ஏற்பாடு செய்கின்றனவாம்.
நம்ம ஊர் டிவிகளில் தமிழைக் கொலை செய்வது போல அங்கு ஆங்கிலத்ைத 'மர்டர்' செய்கிறார்கள் போலும்!
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications