நேபாள பிரதமராக பிரசந்தா இன்று பதவியேற்பு
காத்மாண்ட்: நேபாள குடியரசின் முதல் பிரதமராக பிரசந்தார இன்று பதவியேற்கிறார். அதைத் தொடர்ந்து தனது அமைச்சரவை அமைக்கிறார்.
நேபாளத்தில் கடந்த ஏப்ரலில் நடந்த தேர்தலில் மாவோயிஸ்ட் தலைமையிலான கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியது. புதிய பிரதமராக யாருக்கு பொறுப்பு வழங்குவது என்பதில் சிக்கலும், இழுபறியும் ஏற்பட்டது. மாவோயிஸ்ட் அமைப்பு தலைவர் பிரசந்தாவை (53) பலரும் முன்மொழிந்தனர்.
அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மொத்தம் 601 எம்பிக்கள் உள்ளனர். கடந்த 15ம் தேதி நடந்த புதிய பிரதமர் தேர்வில் 577 எம்பிக்கள் வாக்களித்தனர். பிரசந்தாவை எதிர்த்து நேபாள காங்கிரஸ் தலைவர் ஷெர் பகதூர் துபா போட்டியிட்டார். இதில் 464 ஓட்டுகள் பெற்று பிரசந்தா வெற்றி பெற்றார்.
இதையடுத்து நேபாள குடியரசின் முதல் பிரதமராக பிரசந்தா இன்று பதவியேற்கிறார். அவருக்கு நேபாள அதிபர் ராம்பரன் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
புதிய அமைச்சரவையில் யார் யாருக்கு அமைச்சர் பதவி, அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய துறை குறித்து மாவோயிஸ்ட், சிபிஎன், யுஎம்எல், மாதேசி மக்கள் உரிமை முன்னணி ஆகிய கட்சிகள் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வருகின்றன.
கூட்டணி கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டதை அடுத்து இன்று புதிய அரசு பதவியேற்க உள்ளது. அமைச்சர் பதவி குறித்து இன்னும் இழுபறி நிலவுவதாக தெரிகிறது. இன்றோ அல்லது நாளையோ அமைச்சரவை அமைக்கப்படும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் பாபுராம் பட்டாராய் கூறினார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications