மேற்கு ரயில்வே ரயில்கள் விவரங்கள் பெற மைடுடே
மும்பை: இந்கியாவின் முன்னணி எஸ்எம்எஸ் செய்தி அமைப்பான மைடுடே டெய்லீஸ் (MyToday Dailies) ரயில் பயணிகளுக்கு உதவும் வகையில் இலவச சேவைகள் வழங்கிட மேற்கு ரயில்வேயுடன் கைகோர்த்துள்ளது.
கடந்த 15ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள இந்த சேவை மூலம் ரயில்களின் நேரம், தாமதமாக வரும் ரயில்கள், பாதிக்கப்பட்டுள்ள ரயில் சேவைகள், டிக்கெட் இருக்கிறதா-இல்லையா, புதிய சேவைகள் உள்பட மேற்கு ரயில்வேவுக்கு உட்பட்ட ரயில் சேவைகள் குறித்த பல தகவல்களை இலவசமாக அறியலாம்.
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது START WRUPDATES என்ற எஸ்எம்எஸ்ஸை, நீங்கள் தகவல் பெற விரும்பும் ரயில் நிலையத்தின் பெயரோடு சேர்த்து, 09845298452 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டியது தான்.
(உதாரணம்: START WRUPDATES ANDHERI)
இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நெட்கோர் சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் ஜெயின் கூறுகையில்,
எங்கள் எஸ்எம்எஸ் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து புதிய வசதிகளைத் தருவதே எங்கள் நோக்கம். மேற்கு ரயில்வே உடனான இந்த கூட்டணி மூலம் வாடிக்கையாளர்களுக்கு உரிய நேரத்தில் உள்ளூர் மற்றும் நீண்ட தூர ரயில் சேவைகள் குறித்த விவரங்களை உடனுக்குடன் தர முடியும் என்றார்.
இந்த சேவை செயல்படுவது எப்படி?:
09845298452 என்ற எண்ணுக்கு START WRUPDATES ANDHERI என்ற எஸ்எஸ்எம்சை உங்கள் செல்போனில் இருந்து அனுப்பியவுடன் உங்களுக்கு ஒரு வெல்கம் மேசேஜ் வரும். அதைத் தொடர்ந்து மேற்கு ரயில்வேயின் ரயில் சேவைகள் குறித்த தகவல்கள் உங்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாக இலவசமாக வர ஆரம்பிக்கும்.
இந்த சேவையை நீங்கள் நிறுத்த விரும்பும்பட்சத்தில், STOP WRUPDATES என்ற எஸ்எம்எஸ்ஸை 09845298452 என்ற எண்ணுக்கு அனுப்பலாம். உடனே எஸ்எம்எஸ் அப்டேட்ஸ் வருது நிற்கும்.
இந்த சேவைக்காக வாடிக்கையாளர்களிடம் எந்த கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. முதல் முறையாக சப்ஸ்கிரைப் செய்யவும், பின்னர் விரும்பினால் நிறுத்தவும் அனுப்பும் எஸ்எம்எஸ்களுக்கு மட்டுமே செல்போன் நிறுவனம் கட்டணத்தை வசூல் செய்யும், பின்னர் மைடுடே அனுப்பும் எல்லா எஸ்எம்எஸ்களும் இலவசமே.
இது குறித்து மேற்கு ரயில்வே பொது மேலாளர் ஏ.கே. ஜிங்ரோன் கூறுகையில், பல்வேறு துறைகளிலும் முன்னணியில் உள்ள மேற்கு ரயில்வே தகவல் தொழில்நுட்பத்திலும் முன்னணியில் உள்ளது. கம்ப்யூட்டரைஸ்டு ரிசர்வேசன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது நாங்கள் தான். பின்னர் இன்டர்நெட் மூலமாக டிக்கெட் புக்கிங் மற்றும் வாய்ஸ் ரெஸ்பான்ஸ் சிஸ்டம், ஸ்மார்ட் கார்ட் என அனைத்து புதிய விஷயங்களையும் அறிமுகப்படுத்தினேமாம். இப்போது இலவசமாக எஸ்எம்எஸ் சேவையிலும் இறங்கியுள்ளோம் என்றார்.
ராஜேஷ் ஜெயின் உருவாக்கிய நெட்கோர் நிறுவனம் ஓராண்டுக்கு முன்னர் ஆரம்பித்த மைடுடே டெய்லீஸ் எஸ்எம்எஸ் சேவையை 4 மில்லியன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகின்றனர். தினமும் சராசரியாக 12 மில்லியன் எஸ்எம்எஸ்களை மைடுடே அனுப்புகிறது.
செய்திகள் (தமிழ் உள்பட), பிரேக்கிங் நியூஸ், கிரிக்கெட், ஜோக்ஸ், ஜோதிடம் என பல வகையான சேவைகளும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications