வக்கீல்கள் - லாரி அதிபர்கள் மோதல் -நூதன போராட்டம்
பழனி: பழனியில் வழக்கறிஞர்களுக்கும் லாரி அதிபர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் வழக்கறிஞர்களுக்கு சாதகமாக போலீஸார் செயல்படுவதாக கூறி பஸ் நிலையத்தில் லாரிகளை நிறுத்தி லாரி அதிபர்கள் நூதன போராட்டம் நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி கோட்டைக்கார தெருவைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் செந்தில்குமார். சில தினங்களுக்கு முன்பு தனது மோட்டார் பைக்கில் ரோட்டை கடக்க முயன்றபோது பின்னால் வந்த லாரி அதிபர் ராஜன் என்பவருக்கும் இவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு மோதலில் முடிந்தது.
இதனால் ராஜன் மீது செந்தில்குமார் போலீஸில் புகார் செய்தார். ராஜன் தலைமறைவானார். இந்நிலையில் தனது கணவர் ராஜனை காணவில்லை. அதற்கு வழக்கறிஞர் செந்தில்குமார்தான் காரணம் என்று ராஜனின் மனைவி ராஜாத்தி போலீஸில் புகார் செய்தார்.
புகாரை ஏற்கக் கூடாது என்று கூறி செந்தில்குமார் தலைமையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து லாரி அதிபர்கள் ராஜன், ராமகிருஷ்ணன் மற்றும் குருபரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், போலீசார் வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி லாரி உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து பழனி பஸ் நிலைய நுழைவு வாயில் மற்றும் பஸ் வெளியே செல்லும் வழியில் லாரிகளை நிறுத்தி போக்குவரத்தை மறித்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நூதன போராட்டம் நடத்தினர்.
தகவலறிந்த போலீஸார் மற்றும் வருவாய் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரி உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆர்டிஓவிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications