மூப்பனார் பிறந்த நாள்-தனித் தனி கொண்டாட்டம்
சென்னை: மறைந்த தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனர் ஜி.கே.மூப்பனாரின் 77வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னையில் மூப்பனாரின் ஆதரவாளர்கள் ஜி.கே.வாசன் தலைமையிலும், காங்கிரஸ் அலுவலகத்தில் தங்கபாலு தலைமையிலும் தனித் தனியாக கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மறைந்த மூப்பனாருக்கு இன்று 77வது பிறந்த நாளாகும். இதையொட்டி தமிழக காங்கிரஸ் அலுவலகத்தில் அவரது படத்திற்கு கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். சுதர்சனம் உள்ளிட்ட தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல மூப்பனாரின் மகனும், மத்திய அமைச்சருமான ஜி.கே.வாசன் தலைமையில் தனியாக ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல புதுச்சேரியிலும், மூப்பனார் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் ராதாகிருஷ்ணன், பாமக தலைவர் பேராசிரியர் ராமதாஸ், புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரப்பாலத்தில் உள்ள மூப்பனார் சிலைக்கு மாலை அணிவித்தார்.
காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஏ.வி.சுப்ரமணியம் உள்ளிட்டோர் மூப்பனார் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications