செய்வினை வைத்ததாக கூறி முதியவர் கொலை
உடன்குடி: தூத்துக்குடி அருகே செய்வினை வைத்ததாக கூறி முதியவர் படுகொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி மெஞ்ஞானபுரம் அடுத்த கல்விளையைச் சேர்ந்தவர் புலமாடன், கூலி தொழிலாளி. இவரது மனைவி பேச்சியம்மாள். அதேபகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது அக்கா புலமாடன் வீட்டுக்கு அருகில் வசித்து வருகிறார். இவரது மகள் பெருமாள், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கருப்பசாமி அடிக்கடி குடித்துவிட்டு வந்து புலமாடனிடம் தகராறு செய்தார். எனது அக்கா மகள் நடக்க முடியாமல் இருப்பதற்கு நீதான் காரணம். அவளுக்கு நீதான் செய்வினை வைத்துவிட்டாய் என்று கூறி புலமாடனிடம் தகராறு செய்து வந்தார்.
இந்நிலையில் வழக்கம்போல் குடிபோதையில் இருந்த கருப்பசாமி, தனது அவரது மனைவி கலாவுடன் சேர்ந்து புலமாடன் வீட்டுக்கு சென்று தகராறு செய்தனர். அப்போது புலமாடனுக்கும் கருப்பசாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த கருப்பசாமி தான் வைத்திருந்த அரிவாளால் புலமாடனை சராமரியாக வெட்டினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த புலமாடன் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications