சென்னையில் கனத்த மழை-இன்னும் பெய்யும் என அறிவிப்பு
சென்னை: சென்னை நகரிலும் அதன் புறநகர்களிலும் நேற்று இரவு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிக பலத்த மழை பெய்தது. இடியும், மின்னலும் வெளுத்துக் கட்டியது. இதனால் நகரின் பல பகுதிகள் வெள்ளக் காடாகின.
தென் மேற்குப் பருவ மழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் மறுபடியும் மழை பெய்து வருகிறது. சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தது.
2 நாட்களுக்கு முன்பு விடிய விடிய மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு வாக்கில் திடீரென பலத்த மழை கொட்டியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த கன மழை பெய்தது. இத்தோடு இடியும், மின்னலும் வான வேடிக்கை காட்டின. பலத்த காற்றும் வீசியது.
இதனால் நகரின் தாழ்வான பகுதிகள் பல வெள்ள நீரில் தத்தளித்தன. பல பகுதிகளில் மின்தடையும் ஏற்பட்டது.
நகர் மட்டுமல்லாது புறநகர்ப் பகுதிகள் பலவற்றையும் மழை விளாசித் தள்ளியது.
நேற்று இரவு மட்டும் 10 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்னும் 24 மணி நேரத்திற்குள் இடி, மின்னலுடன் நல்ல மழை பெய்யும். பொதுவாக வானம் மேகமூட்டமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications