ஈரானின் ராக்கெட் சோதனை தோல்வி-அமெரிக்கா
Subscribe to Oneindia Tamil

தானே உருவாக்கிய சாபிர்-1 என்ற ராக்கெட் மூலம் கடந்த 16ம் தேதி டம்மி செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தியது ஈரான்.
விரைவில் ஒமிட் (நம்பிக்கை) என்ற தொலைத் தொடர்பு செயற்கைக் கோளை ஏவப் போவதாகவும் ஈரான் அறிவித்துள்ளது.
இந் நிலையில், ஈரான் ஏவிய ராக்கெட் லிப்ட்-ஆப் ஆன சில நிமிடங்களிலேயே திறனை இழந்துவிட்டது. இதனால் அதிலிருந்ததாகக் கூறப்படும் செயற்கைக் கோள் புவி வட்டப் பாதையை (Orbit) அடையவில்லை என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
இந்த சோதனை முழுத் தோல்வியையே சந்தித்துள்ளதாகவும் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications