பிச்சைக்காரர்கள்: கோவா அமைச்சருக்கு பீகார் முதல்வர் கண்டனம்
பாட்னா: பாட்னாவில் இருந்து கோவாவுக்கு நேரடி ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்ட பிறகு பிச்சைக்காரர்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாக கோவா அமைச்சர் ரவிநாயக் கூறியதற்கு, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவாவில் பிச்சைக்காரர்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துவருவதாக சட்டசபையில் அனைத்து உறுப்பினர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்து பேசிய கோவா உள்துறை அமைச்சர் ரவி நாயக்,
கோவாவிற்கு, பிற மாநிலங்களில் இருந்துதான் பிச்சைகாரர்கள் வருகின்றனர். குறிப்பாக பாட்னாவில் இருந்து, கோவாவுக்கு நேரடி ரயில் போக்குவரத்துத் தொடங்கிய பிறகு அதிக எண்ணிக்கையில் பிச்சைக்காரர்கள் வருகின்றனர் என்று கூறினார்.
ரவிநாயக்கின் இந்த பேச்சு பீகாரில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பீகார் மாநில முதல்வர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாட்னாவில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கோவா அமைச்சர் ரவிநாயக்கின் பேச்சு பீகார் மக்களின் மனதை புண்படுத்தியுள்ளது.
முக்கிய பதவியில் உள்ள அமைச்சர் இப்படி பொறுப்பற்ற முறையில் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது, வருத்தத்திற்குரியது. உடனடியாக அவர் பீகார் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். பீகாரிகள் பிச்சைக்காரர்கள் அல்ல.
தங்களின் திறமையாலும், கடும் உழைப்பாலும், தாங்கள் செல்லும் மாநிலத்திற்கு பெருமை தேடித் தந்துள்ளனர். ரவிநாயக்கின் பேச்சு குறித்து அவர் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சி விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications