பொதுப் பணித்துறை இடத்தில் அரக்கோணம் நீதிமன்றம்
வேலூர்: அரக்கோணத்தில் பொதுப் பணித் துறைக்கு சொந்தமான இடத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்கப்படும் என்று பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக இடம் தேர்வு செய்யப்படும் பணி நடந்து வந்தது. இதையடுத்து பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான ஆய்வு மாளிகை அருகே 2.3 ஏக்கர் நிலத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த இடத்தை அமைச்சர் துரைமுருகன், உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுதாகர், வெங்கட்ராமன் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது அமைச்சர் துரை முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அரக்கோணத்தில் உள்ள நீதிமன்றக் கட்டிடம் போதிய வசதி இல்லாததால் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைத்துத் தர வேண்டும் என்று அரக்கோணம் வழக்கறிஞர்களும், பொது மக்களும் கோரிக்கை வைத்தனர்.
அதை ஏற்று அரக்கோணத்தில் உள்ள பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான ஆய்வு மாளிகை அருகே 2.3 ஏக்கர் நிலத்தை நானும் உயர்நீதிமன்ற நீதிபதிகளும் பார்வையிட்டு தேர்வு செய்துள்ளோம். விரைவில் அந்த இடத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெறும்.
தமிழகத்தில் தனியார் கட்டிடங்களில் இயங்கி வரும் நீதிமன்றங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டவும், நீதித்துறை அலுவலர்களுக்கு குடியிருப்பு கட்டவும், இந்த ஆண்டு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, நீதிமன்ற கட்டிடங்களும், குடியிருப்புகளும் கட்டப்பட்டு வருகின்றது என்றார்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications