'சோரன்': சுயேச்சைகளை வளைக்க காங். தீவிரம்
டெல்லி: சிபு சோரன் முதல்வராக வசதியாக சுயேச்சைகளை அவருக்கு ஆதரவாக திருப்பும் வேலைகளில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநில முதல்வர் பதவி கோரி தொல்லை கொடுத்து வருகிறார் சோரன். நம்பிக்கைத் தீர்மானத்தில் மத்திய அரசைக் காப்பாற்றியவர் என்பதால் அந்தக் கோரிக்கையை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டுவிட்டது.
ஆனால் காங்கிரஸ்-சோரன்-லாலு ஆகியோர் உதவியோடு முதல்வரான மது கோடா, பதவியை விட்டுத் தர மறுக்கிறார். இதையடுத்து காங்கிரஸ் இந்த விஷயத்தில் அமைதியானது.
இதனால் கோபமடைந்த சோரன், ஜார்க்கண்ட் அரசுக்கு தந்து வரும் ஆதரவை வாபஸ் பெற்றார். இதை எதிர்பார்க்காத காங்கிரஸ் மீண்டும் சோரனை முதல்வராக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
மத்திய அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற்ற பின் நேற்று முதன் முறையாக காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திக்க சோரனுக்கு அப்பாயின்மெண்ட் தரப்பட்டது. அவரும் சோனியாவை சந்தித்து தான் முதல்வராக சுயேச்சைகளின் ஆதரவைப் பெற உதவுமாறு கோரினார்.
இதையடுத்து தனது அரசியல் ஆலோசகர் அகமத் படேலை இந்தப் பணியில் இறக்கி விட்டுள்ளார் படேல். அவர் சுயேச்சைகளுடன் பேச ஆரம்பித்துள்ளார்.
ஆனால், சுயேச்சையான முதல்வர் கோடாவும் சுயேச்சைகளை வளைக்க முயன்று வருகிறார். சுயேச்சைகள் ஆதரவின்றி அங்கு யாராலும் ஆட்சி அமைக்க முடியாத நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.
சோரனை சந்தித்த பின் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலுவை சோனியா சந்தித்தார்.
இதற்கிடையே தனது பெரும்பான்மையை நிரூபிக்க இம்மாதம் 25ம் தேதி வரை ஆளுநர் சையது சிப்தே ரசி, முதல்வர் மது கோடாவுக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி விரைந்த கோடா:
இந் நிலையில் தனது துணை முதல்வர் ஸ்டீபன் மராண்டியுடன் இன்று கோடா டெல்லி விரைந்தார். அவர் சோனியாவை சந்தித்துப் பேசவுள்ளார். அப்போது தனது முதல்வர் பதவியை கோடா விட்டுத் தரலாம் எனத் தெரிகிறது.
கட்சிகள் பலம்:
82 எம்எல்ஏக்கள் கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபையில் ஆட்சியமைக்க 42 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை.
இதில் சிபு சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவிடம் 17 எம்எல்ஏக்கள் உள்ளனர். லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்திடம் 9 எம்எல்ஏக்களும், காங்கிரசிடம் 7 எம்எல்ஏக்களும் உள்ளனர்.
இவர்களுடன் முதல்வர் கோடா, துணை முதல்வர் ஸ்டீபன் மராண்டி உள்பட 9 சுயேச்சை எம்எல்ஏக்கள் மற்றும் 2 பாஜக அதிருப்தியாளர்கள் ஆகியோர் இணைந்து ஆட்சியை அமைத்தனர்.
இந் நிலையில் தான் முதல்வர் பதவியைக் கேட்கிறார் சிபு. ஆனால், முதலில் சிபுவுக்கு ஆதரவு தெரிவித்த லாலு பிரசாத் இப்போது பின்வாங்க ஆரம்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அவரை சமாதானப்படுத்தி சிபுவை முதல்வராக்க சோனியா முயன்று வருகிறார்.
-
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications