பாளை சிறையில் செல்போன்-3 வார்டன்கள் மாற்றம்
நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறை வார்டன்கள் மூன்று பேர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதுமுள்ள சிறைகளில் கைதிகளுக்கு செல்போன், சிம்கார்டு, போதை பொருட்கள் சட்டவிரோதமாக சப்ளை செய்யப்படுகின்றன. இதையடுத்து சிறைகளில் அடிக்கடி சோதனை நடத்தப்படுகிறது.
பாளை மத்திய சிறையிலும் கைதிகளிடம் செல்போன், சிம்கார்டு மற்றும் கஞ்சா போன்றவை தாரளாமாக பயன்படுத்தப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். பாளை சிறையில் கைதி, பெருமாள்புரத்தை சேர்ந்த கோழிஅருள் என்பவரிடம் கடந்த சில தினங்களுக்கு முன் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் இந்த செல்போனில் இருந்து அவர் நெல்லை மற்றும் மதுரையிலுள்ள முக்கிய ரவுடிகளிடம் தொடர்பு கொண்டு பேசியிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து கோழி அருளிடம் சிறையில் செல்போன் கிடைத்தது எப்படி என்றும் ரவுடிகளிடம் பேசுவதற்கு உதவியவர்கள் யார் என்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சிறை வார்டன்கள் சுப்பிரமணியன், பரவசிவன், தலைமை வார்டன் வேலுச்சாமி ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் வேறு சிறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
மேலும் பாளை சிறையில் 2வது பிளாக்கில் உள்ள சாக்கடை அடியில் பாலிதின் பையில் சுற்றப்பட்டு ஒரு பொட்டலம் கிடந்ததை கண்டுபிடித்தனர். அவற்றை பிரித்து பார்த்தபோது அதில் 250 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. சிறை கைதிகளுக்கு வார்டன்கள் உதவியுடன் கஞ்சா சப்ளை செய்யப்பட்டு வருவதாக ஏற்கனவே புகார் வந்துள்ள நிலையில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications