கோட்டையில் கேக் வெட்ட மாட்டேனு சொல்லிட்டு! நடிகையுடன் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டமா? ஆதவ் பதில்
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் ஒரு நிறுவனத்தில் அமோனியா கசிவால் பலர் இறந்து கொண்டிருக்க, முதல்வர் விஜய் நடிகை த்ரிஷாவுடன் பிறந்தநாள் கொண்டாடியது குறித்த விமர்சனத்திற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து ஆதவ் அர்ஜுனா கூறியிருப்பதாவது: ஒரு ஆக்ஷன் வந்தா ஒரு ரியாக்ஷன் இருக்கும். நான்கு நாட்களாக முதல்வரைப் பார்த்து தலையில இடியே விழுந்தாலும் அவர் பேச மாட்டாரான்னு சொல்லி மூன்று நாட்களாக ஒரு எள்ளி நகையாடிய திமுகவைப் பார்த்து 'மரபு என்ன' என்று ஏன் கேட்கவில்லை? அதைக் கேட்க வேண்டும். அதை நாங்கள் காலையில கம்யூனிஸ்ட் தோழர்களிடமும் பதிவு பண்ணினோம்.

அண்ணன் திருமாவளவன் மரபுப்படி ஒரு வார்த்தையை பேசியிருக்கிறார். கண்டிப்பாக அவர் மீது எங்களுக்கு அன்பும் மதிப்பும் இருக்கிறது, நல்ல கருத்துக்களை நாங்கள் வரவேற்போம்.
4 நாட்களாக சட்டசபையில் நடந்த காட்சிகளை திருமா அண்ணன் பார்க்க வேண்டும். முதலமைச்சர் குறித்து அவதூறான சொற்கள் என்ன பேசினார்கள் என்று பார்க்க வேண்டும். அப்ப முதலமைச்சர் அதுக்கு ரியாக்ட் பண்றாரு. என்ன 'பேசு பேசுங்குறீங்க, நான் பேசும்போது என்ன நடந்துச்சு?' கொளத்தூர்ங்கிறது தமிழ்நாட்டில் இல்லாத வார்த்தை கிடையாது. ஏன் கொளத்தூர்னு சட்டசபையில சொல்லக்கூடாதா?
நாங்கள் யாரையும் வந்து கிண்டல் செய்யவில்லை. ஆனால், எங்கள் மீது விமர்சனங்களும் எங்கள் மீது ஒரு அட்டாக்கும் வரும்பொழுது, நாங்கள் பதில் சொல்ல அரசியல் ரீதியாகப் பதில் சொல்ற இடத்தில் நாங்கள் இருக்கிறோம். அவங்க அடிச்சிட்டே இருப்பாங்க, நாங்க அமைதியா போயிட்டே இருக்கக்கூடிய அந்த பண்ணையாத்தர அரசியலில் நாங்கள் இருக்க மாட்டோம்.
நாங்கள் அமைதியாக மரபுப்படி இருக்கிறோம். திமுக சொல்லக்கூடிய அனைத்து போலியான பிரச்சாரங்களுக்கும் நாங்கள் பதில் சொல்லுவோம். அப்படித்தான் முதலமைச்சர் அவர்கள் பதில் சொன்னார். பதில் சொல்லும்போது அமைதியா போயிட்டே இருந்துச்சு. 'பார்ட்டி ஃபண்ட்' என்று மட்டும்தான் சொன்னார். 'திமுக பார்ட்டி ஃபண்ட்' என்று சொன்னாரா? அங்கு அதிமுகவும் இருக்கிறார்கள், மற்ற கட்சிகளும் இருக்கிறார்கள். பார்ட்டி ஃபண்ட்னு சொன்னவுடனே ஏன் திமுகவினருக்குக் கோபம் வர வேண்டும்?
ஏன்னா அவங்களுக்குத் தெரியும், பார்ட்டி ஃபண்ட் போன ஆட்சியில் எல்லா டிபார்ட்மென்ட்டிலும் எப்படி இருந்தது என்று. இன்றைக்கு நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர்கள் பார்த்தீங்கன்னா எல்லாம் ஆன்லைன் மயமாக்கப்பட்டிருக்கு. இதை நாங்கள் சேலஞ்ச் பண்றோம், ஏன்னா முதலமைச்சர் வழியில் நாங்கள் இருக்கிறோம்.
அதேபோல், பள்ளிக்கல்வித் துறையில் ஒவ்வொரு ஸ்கூலிலும் புதுப்பிக்க (renewal)ஃபீஸ்க்கு எவ்வளவு வாங்கினாங்க? மகேஷ் பொய்யாமொழி 'நான் காசே வாங்கவில்லை' என்று நிமிர்ந்து நின்று சொல்ல முடியுமா? சொல்லச் சொல்லுங்க. கிட்டதட்ட 1000 ஸ்கூலிடம் தலா 25 லட்ச ரூபாய் வாங்கியிருக்கிறார்கள். இது பொதுமக்களுக்குத் தெரியும்.
இதைச் சட்டரீதியாக அந்தந்த ஏஜென்சி உரிய காலத்தில் நிரூபிப்பார்கள். மக்கள் மன்றத்தின் முன்பு, போன அரசு எப்படி இருந்தது, என்னுடைய அரசு எப்படி இருக்கு என்று முதலமைச்சர் நேரலையிலேயே தைரியமாக மைக்கைப் பிடித்து விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
முதலமைச்சர் தைரியமாக மைக்கைப் பிடிச்சு 'நாங்கள் மக்கள் பணத்தை தொட மாட்டோம்' என்று சொல்கிறார் என்றால், அதற்கு ஒரு துணிவு இருக்கிறது.
ஆனால், அதையும் மீறி இவங்க எழுந்து குரல் கொடுக்கும் பொழுது சபாநாயகர் (Speaker) சொல்கிறார் - 'முதலமைச்சர் பேசி முடிச்ச உடனே நீங்கள் பதில் கொடுங்கள் எதிர்க்கட்சித் தலைவர், நான் உங்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறேன்' என்று.
வரலாற்றுல இதுவரைக்கும் முதலமைச்சர் பேசின பிறகு வேற எதிர்க்கட்சித் தலைவர்கள் பேச முடியாது. சபாநாயகர் மரபை மீறி எதிர்க்கட்சித் தலைவருக்குப் பதில் பேச வாய்ப்பு கொடுத்தும், முதலமைச்சர் அன்பார்லிமென்ட் வேர்ட் எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்து அவருடைய பேச்சைக் கேட்டு முடிச்ச பிறகு, 'எங்களுடைய அரசு எப்படி நேர்மையா இருக்கு' என்று அவர்கள் சொல்லியிருக்கலாம். ஆனால் சொல்ல மாட்டாங்க.
எதிர்க்கட்சித் தலைவருக்கு எந்த நேர்மையும் இல்லை, துணிச்சலும் இல்லை. அதனால வெளிநடப்பு செஞ்சுட்டு வெளிய போய் பத்திரிகையாளர்களிடம் பேசியிருக்கிறார்.
நேற்று மின்துறையில் எங்களுடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 400 பேருக்கு அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் பண்ணினார். முன்னாடி இதற்குக் குறைந்தது 25 லட்ச ரூபாய் வாங்குவாங்க. அப்போ 400 பேருக்கு 25 லட்சம்னா எத்தனை கோடி ரூபாய் வசூல் பண்ணியிருக்கலாம்? ஆனால், எளிய மக்கள் மற்றும் இளைஞர்களுக்கு நேர்மையான முறையில் முதலமைச்சர் கையாலேயே வேலைவாய்ப்பு கொடுக்கிறார்.
இவ்வளவு பெரிய மாற்றங்களை எங்களுடைய முதலமைச்சர் உருவாக்கும் பொழுது, அரசியல் ரீதியான பொய் பிரச்சாரங்களையும், தனிப்பட்ட தாக்குதல்களையும் அவர்கள் செய்கிறார்கள். இந்த பிரச்சாரத்தை எலக்ஷன் மோடிலேயே பண்ணாங்க, அதனால்தான் கடுமையாகத் தோற்றார்கள். அவர்கள் அந்த தனிநபர் தாக்குதல் அரசியலைச் செய்யட்டும், நாங்கள் மக்களுக்கான அரசியலைச் செய்கிறோம்.
திமுக எங்களுடைய அரசியல் எதிரி. பனையூர் பாபுவை (முன்னாள் எம்.எல்.ஏ) கூட்டிட்டுப் போயி, விசிகவை (VCK) உடைக்கத் மு.க.ஸ்டாலின் இரண்டு மணி நேரம் அறிவாலயத்தில் புரோகிராம் நடத்துகிறார். விசிகவுக்கு என்ன மெசேஜ் சொல்றாங்க? 'நீங்க எங்களை விட்டுப் போயிட்டீங்களா, உங்க கட்சியை நாங்கள் உடைக்கப் போறோம்' என்கிற மெசேஜ் தான் அது.
ஆளூர் ஷாநவாஸ் கிட்ட முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டைரக்டா கூப்பிட்டுப் பேசிட்டு இருக்காரு, 'எங்க கட்சிக்கு வந்துடுங்க' என்று. இந்த பண்ணையார்தனத்தையும், திமுகவின் ஆதிக்கத்தையும் உடைக்க வேண்டும் என்றுதான் நாங்கள் நினைக்கிறோம். நாங்கள் இந்த பண்ணையார்தனத்திற்கும், திமுகவின் ஆதிக்கத்திற்கும் எப்போதும் குரல் கொடுத்துக் கொண்டே இருப்போம். இதுதான் எங்களுடைய மெசேஜ் என்றார்.
அமோனியா கேஸ் கசிவால் மக்கள் இறந்து கொண்டிருக்கும் நிலையில் முதல்வர் விஜய், நடிகையுடன் பிறந்தநாள் கொண்டாடுவதாக திமுகவினர் விமர்சிப்பது குறித்து ஆதவ் அர்ஜுனா கூறுகையில், இது போன்று கீழ்த்தரமான பிரச்சனைகளை காமராஜர் காலத்தில் உருவாக்கினார்கள். ஜெயலலிதாவை சட்டசபையில் எப்படி அசிங்கப்படுத்தினாங்க.
அறிவில்லாதவர்கள் தனிப்பட்ட தாக்குதல்களை நடத்துவார்கள். திமுகவிடம் நேர்மையான சிந்தனை இல்லை. அதனால்தான் மக்கள் அவர்களை தேர்தலில் புறக்கணித்துவிட்டார்கள், அவர்களுக்கு பதில் சொல்லி டைம் வேஸ்ட் செய்ய வேண்டாம் என்றார் ஆதவ்.












Click it and Unblock the Notifications