அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவா? அதைவிட அரசியல் மோசடியே இல்லையே! வெகுண்டெழுந்த வைகோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணா திமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு கொடுக்க முனைந்தது உண்மையாக இருக்குமானால் அதைவிட அரசியல் மோசடி ஒன்று இருக்க முடியாது எனவும், விஜயின் சட்டமன்ற பேச்சு மற்றும் செய்கை தொடர்பான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், சில மாதங்களில் அவர் கற்று தேர்வார். தெளிவு பெற்றுவிடுவார் என்று தான் நம்புவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

மதுரை பாண்டி கோவில் பகுதியில் மதிமுக நிர்வாகியின் இல்ல விழாவில் கலந்து கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மணமக்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்த பிறகு அவருக்கு வாழ்த்துக்கள் கூறினார்.

Vaiko Slams DMK-AIADMK

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ: எனது புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நடக்கிறது. அத விழாவுக்கு, முன்னாள் முதல்வர், இந்நாள் முதல்வர் விழாவிற்கு வருவார்களா? என்றால், வருவார்கள் என எதிர்பார்க்கிறேன். ஆனால், அது அவர்கள் முடிவு.

விஜயின் சட்டமன்ற பேச்சு மற்றும் செய்கை குறித்த விமர்சங்கள் செய்கிறார். தற்போது தான் அவர் முதல்வராகி இருக்கிறார். சில மாதங்களில் அவர் கற்று தேர்வார். தெளிவு பெற்றுவிடுவார் என நான் நம்புகிறேன் சட்டமன்றத்தில் அப்பாவை காணோம் என பேசியதோடு விமர்சனம் செய்திருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசுவது அதைப் பற்றி நான் கமெண்ட் அடிக்க முடியுமா? அதைப் போலத்தான் அவர் பேசுவதையும் கமெண்ட் செய்ய விரும்பவில்லை.

மக்கள் நலனுக்காக கருவேலமரங்களை அகற்றுகிறோம். ஓட்டு கிடைக்காத ஒரு வேலையில் ஈடுபட்டு ஒரு ஓட்டு கூட அதனால் கிடைக்காது. ஆனாலும் தமிழ்நாட்டின் நலனுக்கு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அந்த வேலையை செய்கிறேன். தமிழ்நாட்டு வாழ்வாதார கடமைகளில் எல்லா கட்சிகளையும் விட முன்னணியில் நிற்பது மதிமுக தான். திமுக கூட்டணி சேரக் கூடாது என ஆ.ராசா விமர்சனம் செய்துள்ளார். ஒவ்வொருக்கும் ஒவ்வொரு பாணி உள்ளது. ஆ.ராசாவின் பாணி அது.

27 ஆம் தேதி பொதுக்குழு கூடுகிறது. அந்த பொதுக்குழுவில் கருத்துக்கள் பரிமாறப்பட்டு பொதுக்குழு தீர்மானங்களை வடித்தெடுக்க உள்ளோம். என்னுடைய பயணங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன பல வருடங்களாக. அது தொடர்ந்து கொண்டே இருக்கும். விலகி விட்டேன் என்று சொல்பவர்கள், மந்திரி சபையில் சேர்ந்து விட்டேன் என்று சொல்பவர்கள். ஆனால் திமுகவில் இருக்கிறோம் என்று சொல்பவர்கள் எனக்கு ஒன்றுமே புரியவே மாட்டேங்குது.

அந்த நிலைப்பாடு அபூர்வமாக இருக்க முடியும். அதைப்பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. ஆனால், அண்ணா திமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு கொடுக்க முனைந்தது உண்மையாக இருக்குமானால் அதைவிட அரசியல் மோசடி ஒன்று இருக்க முடியாது" என கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+