வடஇந்திய ரயில்களை விட தென்னிந்திய ரயில்கள் சுத்தமாக இருக்க என்ன காரணம்? டிரெண்டாகும் வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரயில்கள் தூய்மையாக இல்லை என பலரும் புலம்புவதைக் கேட்டிருப்போம். அது உண்மையும் கூட! பெரும்பாலான ரயில்களின் பராமரிப்பு சிறப்பாக இருக்காது. ஆனால், இங்கு தமிழகத்தில் சாதாரண ரயில் மிக க்ளீனாக இருக்கிறது. இது தொடர்பாக நெட்டிசன் ஒருவரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் பொது போக்குவரத்தாக இருப்பது ரயில்கள் தான். ஒவ்வொரு நாளும் பல கோடி பயணிகள் ரயில்களை பயன்படுத்துகிறார்கள். மக்களுக்கு குறைந்த விலையில் அதிக தூரம் பயணிக்க ரயில்களே சிறந்த ஒரு போக்குவரத்தாக இருக்கிறது. அதேநேரம் இந்திய ரயில்கள் சுத்தமாக இருப்பதில்லை என்ற புகார்களும் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது.

Tamil nadu vs North India train trian India

தமிழ்நாடு ரயில்

இந்த சூழலில் மதுரை - ராமேஸ்வரம் பயணிகள் ரயிலில் பயணித்த ஒருவரின் போஸ்ட் இப்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகிறது. சாதாரண பயணிகள் ரயிலிலும் தூய்மை மற்றும் பராமரிப்பு சிறப்பாக இருக்க முடியும் என்பதையே இந்த ரயில் நமக்கு காட்டுவதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள். கவுரவ் என்ற அந்த பயணி, மதுரை - ராமேஸ்வரம் ரயிலில் சமீபத்தில் பயணித்துள்ளார்.

அப்போது ரயில் மிகத் தூய்மையாக இருந்ததைப் பார்த்து அவரே மிரண்டு விட்டாராம். அந்த வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். ரயிலின் கழிப்பறைகள், கைகழுவும் பகுதிகள், பயணிகள் அமரும் பெட்டிகள் என எல்லா இடமும் மிகத் தூய்மையாக இருக்கிறது. புதிய ரயிலாக இருக்கும் என நீங்கள் நினைக்கலாம். இல்லை பார்க்கும்போதே தெரிகிறது. அது பழைய ரயில் தான்.. ஆனால், அனைத்தும் மிகவும் சுத்தமாக பராமரிக்கப்பட்டு இருக்கிறது.

சுத்தம்

பொதுவாக வந்தே பாரத் போன்ற பிரீமியம் ரயில்களில் மட்டுமே ரயில்களை இந்தளவுக்குச் சுத்தமாக வைத்திருப்பார்கள் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். ஆனால், சரியான பராமரிப்பு இருந்தால் தினசரி சாதாரண பயணிகள் ரயிலிலும் இதே அளவுக்குச் சுத்தம் கிடைக்கும் என்பதையே இந்த வீடியோ உணர்த்துவதாக இருக்கிறது.

பயணிகள் பொறுப்பு

இது தொடர்பாக அவர் மேலும், "மதுரையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு ரயிலில் சென்றபோது ஒரு விஷயத்தை நான் கவனித்தேன். பொதுவாக ப்ரீமியம் ரயில்களில் மட்டுமே சிறப்பான பராமரிப்பு இருக்கும். ஆனால் சாதாரண இந்த பயணிகள் ரயிலும் கூட க்ளீனாக இருந்தது. முழு ரயிலும் தூய்மையாக இருந்தது. இருக்கைகள் நேர்த்தியாகவும், தரைப்பகுதி எந்தவொரு கரையும் இல்லாமல் இருந்தது. எங்கும் குப்பைகள் சிதறிக் கிடக்கவில்லை. கழிவறைகள் கூட மிகச் சிறப்பாக இருந்தது.. கை கழுவும் இடமும் கூட க்ளீனாக இருந்தது.. தண்ணீர் தேங்கி நிற்பது போன்ற காட்சிகள் இல்லை.

இந்தப் பயணம் ஒரு முக்கியமான உண்மையையும் உணர்த்தியது.. தூய்மை என்பது ரயில்வே நிர்வாகத்தின் பொறுப்பு மட்டுமல்ல, அது பயணிகளின் பொறுப்பும் கூட. குப்பைகளை வீசாமல் இருப்பது, குப்பைத் தொட்டிகளைப் பயன்படுத்துவது, கழிவறைகளைப் பயன்படுத்திய பின் தூய்மையாக வைத்திருப்பது ஆகியவையும் ரயிலின் தூய்மையைப் பராமரிக்க முக்கிய பங்காற்றுகிறது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

வட இந்தியா vs தென்னிந்தியா

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது. பலரும் ரயில்களில் இந்தளவுக்கு க்ளீனாக இருப்பதைப் பாராட்டி வருகிறார்கள். இன்னும் சிலர் வட இந்திய தென் இந்திய ரயில்களை ஒப்பிட்டும் போஸ்ட் போடுகிறார்கள். தென்னிந்தியாவில் பான் மசாலா மற்றும் குட்கா பயன்பாடு குறைவாக இருப்பதும் ரயில் இந்தளவுக்கு தூய்மை இருக்கக் காரணமாக இருப்பதாகவும் சிலர் பதிவிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+