விஜய்க்கு அவசியமேயில்லை.. எம்எல்ஏக்களை களவாடாத தவெக! எங்க ஆளுங்களே தாவிட்டாங்க! துரை வைகோ வேதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் அரசு எம்.எல்.ஏக்களை களவாட வேண்டிய அவசியம் கிடையாது. அவர்கள் வாக்குகளை களவாடினார்களா? பல கோடி செலவு செய்தும் திமுக, அதிமுகவால் வெல்ல முடியவில்லை என மதிமுக எம்பி துரை வைகோ கூறியுள்ளார். மேலும், தவெக ஆட்சியில் லஞ்சம் ஊழல் குறைந்தது என்பது நூற்றுக்கு நூறு உண்மை எனவும் கூறியுள்ளார்.

வியட்நாமில் உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவாக சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. செவ்வாய் அல்லது புதன் கிழமை சொந்த ஊருக்கு வரும். அஜாக்கிரதை தான் காரணம் என கூறுகிறார்கள். உரிய பாதுகாப்பு ஏற்பாடு இருக்கிறதா என்பதை பார்த்தே சுற்றுலா செல்ல வேண்டும்.

உயிரிழந்தவர்கள் இல்லங்களுக்கு செல்ல உள்ளேன். விஜய் அரசு எம்.எல்.ஏக்களை களவாட வேண்டிய அவசியம் கிடையாது. அவர்கள் வாக்குகளை களவாடினார்களா? பல கோடி செலவு செய்தும் திமுக, அதிமுகவால் வெல்ல முடியவில்லை.

Durai Vaiko Vijay mdmk

திமுக - அதிமுக கூட்டணி வைக்க முயற்சி செய்ததால் தான் எம்.எல்.ஏக்கள் அதிமுக முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா செய்தார்கள். மதிமுக எம்.எல்.ஏக்கள் விலை போய் விட்டார்கள். திமுக power center கையில் உள்ளது. திமுக, அதிமுக தலைமையின் மீது நம்பிக்கை இல்லாததால் அந்த கட்சியிலிருந்து வெளியேறுகிறார்கள். அதிமுக - திமுக ஆட்சியில் புதிய ஏர்போர்ட் கொண்டு வர நடவடிக்கை எடுக்கவில்லை.

பரந்தூர் விமான நிலைய அமைக்கும் திட்டத்தை த.வெ.க அரசு கைவிட்டு உள்ளது. அதற்கு பல காரணங்கள் உள்ளது. வேறு ஒரு இடத்தில் சுற்றுசூழலுக்கு பாதிக்காத வகையில் வேறு விமான நிலையம் அமைக்க வேண்டும். திமுக - த.வெ.க ஒரே அணியில் இணைவது ஏற்புடையதல்ல. பா.ஜ.க உடன் கூட்டணியில் உள்ள அதிமுக உடன் இணைந்து முயற்சி செய்த பா.ஜ.கவை எப்படி திமுக எதிர்க்கும்?

தவெக ஆட்சியில் லஞ்சம் ஊழல் குறைந்தது என்பது நூற்றுக்கு நூறு உண்மை. புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள அண்ணாமலைக்கு வாழ்த்துகள். தமிழ்நாட்டில் இல்லாத மாற்றத்தை விஜய் கொண்டு வந்துள்ளார். இந்த மாற்றம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக விஜய்யுடன் கூட்டணி." என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+