டிசம்பர் முதல் சென்னை-திருச்சி மின்சார ரயில்
சென்னை: சென்னை எழும்பூர்-திருச்சி இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில்கள் வரும் டிசம்பர் மாதத்திலிருந்து மின்சாரத்தில் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே இணையமைச்சர் வேலு தெரிவித்தார்.
தெற்கு ரயில்வேயில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மேம்பாட்டு பணிகள், மேலும் செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடந்தது. இக்கூட்டத்திற்கு பிறகு ரயில்வே இணையமைச்சர் வேலு கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள மீட்டர் கேஜ் பாதைகள் இன்னும் இரண்டு ஆண்டுகளில் அகல ரயில் பாதையாக மாற்றப்படும். இந்த ஆண்டு 720 கி.மீ., தூரம் மீட்டர் கேஜ் பாதை அகல ரயில் பாதையாக மாற்றியமைக்கப்படும். ரூ.822 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விழுப்புரம்-திண்டுக்கல் இடையே 223 கி.மீ. தூரம் இரண்டாவது புதிய ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது.
இந்த ஆண்டிலேயே இப்பணி தொடங்கப்படும். விழுப்புரம்-அரியலூர் இடையே ரயில் பாதையில் மின்மயமாக்கும் பணி முடிவடைந்துள்ளது. அரியலூர்-திருச்சி இடையே பணி நடந்து வருகிறது. இப்பணி முடிக்கப்பட்டு, டிசம்பர் மாதத்திலிருந்து சென்னை எழும்பூர்-திருச்சி இடையே எக்ஸ்பிரஸ் ரயில்கள் மின்சாரத்தில் இயக்கப்படும்.
வரும் ஆண்டு திருச்சி-தூத்துக்குடி, மணியாச்சி-நாகர்கோவில் இடையே மின்மயமாக்கப்பட ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. திண்டுகல்-கரூர்-சேலம், விழுப்புரம்-வேலூர், கோவை-மேட்டுப்பாளையம் இடையிலும் ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட உள்ளது.
திருநெல்வேலி-திருச்செந்தூர் இடையே அகல ரயில் பாதையில் ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் மூலம் ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு சான்றிதழ் கிடைத்த ஒரு வாரத்தில் இப்பாதையில் ரயில் போக்குவரத்து துவங்கப்படும்.
திருநெல்வேலி-திருச்செந்தூர் இடையே மூன்று ஜோடி பாசஞ்சர் ரயில்கள் முதல் கட்டமாக இயக்கப்படும். திருநெல்வேலி வழியாக சென்னை மற்றும் முக்கிய நகரங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணம் செய்ய ஏதுவாக இந்த பாசஞ்சர் ரயில்களின் நேரம் அமைக்கப்படும்.
திண்டுக்கல்-மதுரை இடையே இரண்டாவது பாதை, திருவாரூர்-நாகூர் அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்து ரயில்வே பாதுகாப்பு கமிஷனரின் ஆய்வுக்கு காத்திருக்கிறது.
திருவாரூர்-பட்டுக்கோட்டை- பேராவூரணி- காரைக்குடி இடையே 148 கி.மீ. மீட்டர் கேஜ் பாதை அகல ரயில் பாதையாக மாற்றியமைக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக பணி துவங்கப்படும் என்றார்.
-
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications