கிருஷ்ண ஜெயந்தி- ஜெயலலிதா வாழ்த்து
சென்னை: தீயவை அகன்று, நன்மை செழித்து ஆனந்தம் பொங்கட்டும் என்று கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துத் தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கோகுலத்து கோமகனாம் கண்ணன் அவதரித்த நன்னாளான கிருஷ்ண ஜெயந்தி திருநாளை ஆர்வத்தோடும் மகிழ்வோடும் கொண்டாடும் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இனம், மொழி, மதம் மற்றும் சாதியற்ற பாதையின் மூலம் பாமர மக்களுக்கு வாழ்க்கை முறையை வகுத்து கொடுத்து, துன்பத்தில் இன்பம் காண வைக்கும் ஞானரசமாம் பகவத் கீதையை இந்த உலகத்திற்கு உபதேசித்தவர் பகவான் கிருஷ்ணர்.
கிருஷ்ணர் அவதரித்த இந்த நன்னாளில், மண்ணைத் தின்ற வாயில் விண்ணை காண்பித்த கண்ணனின் திருவருளால் தீயவை அகன்று நன்மை செழித்து அனைவரும் ஆனந்த வாழ்வு வாழ வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications