கொள்ளை: பல பிரயோகம் தவறில்லை-ஜாங்கிட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வழிப்பறி கொள்ளை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை பிடிக்கும்போது அவர்கள் பொது மக்களைத் தாக்கினால், பொதுமக்கள் தங்களை காத்துக் கொள்ள குறைந்தபட்ச பலப்பிரயோகம் செய்து அவர்களை போலீசில் ஒப்படைக்கலாம் என சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் கூறினார்.

நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

சமீபத்தில் கல்லூரி மாணவர்கள் ஒரு வழிப்பறி திருடனை பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். அதேபோல் திருநின்றவூரில் ஒரு பெண்ணிடம் சங்கிலி பறித்த 2 பேரை பொதுமக்கள் பிடித்துள்ளனர்.

வழிப்பறி கொள்ளை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை பொதுமக்களே பிடித்து போலீசில் ஒப்படைக்கலாம். அவ்வாறு பிடிக்க முற்படும்போது அந்த நபர்கள் பொதுமக்களை தாக்கினால் குறைந்த பட்ச பலப்பிரயோகம் செய்து அவர் களைப்பிடித்து போலீசில் ஒப்படைக்கலாம்.

இவ்வாறு பிடித்துக்கொடுக்கும் பொதுமக்களை சாட்சி என்ற பெயரில் அழைக்கப்பட மாட்டார்கள்.

மேலும் இதுவரை 365 மனுக்கள் பெறப்பட்டு அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எஸ்.எம்.எஸ். மூலம் 96000 96400 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் அதிகளவில் புகார் தெரிவித்து வருகிறார்கள் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+