பொங்கலூர் பழனிச்சாமி ஆதரவாளர்கள் மீது நில மோசடி புகார்
கோவை: நில மோசடி செய்ததாக, சிறு தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் மீது புகார் கொடுத்துள்ளார் பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒருவர்.
தமிழக சிறு தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் சிலர் மீது நில மோசடி புகார் எழுந்துள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாட்சியை அடுத்த அரிக்கடவு ராமசந்திரபுரத்தைச் சேர்ந்த மோகன் ராஜ் என்பவர் இந்த புகாரை எழுப்பியுள்ளார்.
அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் ஆதரவாளர்களான கிரி, ராஜூ ஆகியோர் இரண்டரை ஏக்கர் நிலத்தை பணம் தராமல் பறித்துக் கொண்டதாக போலீஸில் அவர் புகார் செய்துள்ளார். இதுகுறித்து மோகன் ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது
அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் ஆதரவாளர்களான கிரி, ராஜூ ஆகியோர் எனது இரண்டரை ஏக்கர் நிலத்தை பணம் தராமல் பறித்துக் கொண்டனர். இதுகுறித்து போலீஸில் புகார் செய்தேன். ஆனால், அமைச்சரின் ஆதரவாளர்கள் தரும் பணத்தை வாங்கி கொண்டு போகும்படி போலீஸ் அதிகாரிகள் மிரட்டுகின்றர். இது குறித்து முதல்வர் கருணாநிதி, உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின், கவர்னர் பர்னாலா, காவல் துறை உயர் அதிகாரிகள் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பியுள்ளேன் என்று கூறினார்.
முன்னாள் தமிழக கைத்தறித்துறை அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா மீது ஆள் கடத்தல், மற்றும் நில பறிப்பு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications