ரஜினிக்கு ஒத்துழைப்பு இல்லை: மதுரை தியேட்டர் உரிமையாளர்கள்
குசேலன் படப் பிரச்சினை தொடர்பாக விவாதிக்க மதுரையில், மதுரை, திண்டுக்கல் மாவட்ட தியேட்டர் உரிமையாளர்களின் அவசரக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் குசேலன் பட நஷ்டம் குறித்து முக்கிய விவாதம் நடந்தது. அதன் பின்னர் மதுரை மாநகர திரைப்பட உரிமையாளர்கள் சங்க செயலாளர்கள் குமரேசன், கஜேந்திரன், ராஜா பாரூக், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், ஆகஸ்ட் 1ம் தேதி மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 21 தியேட்டர்களில் குசேலன் திரையிடப்பட்டது. சாய்மீரா பட நிறுவனம், சிவாஜி படத்தை விட நன்றாக இருக்கும் என்று தெரிவித்தனர். இதனால், சிவாஜி படத்திற்குக் கொடுத்த விலையை குசேலனுக்கும் கொடுத்தோம்.
ஆனால் படம் அப்படி இல்லை, வசூலும் இல்லை. 50 சதவீதம் கூட வசூலாகவில்ைல என்று சாய்மீரா நிறுவனத்திடம் முறையிட்டோம். அவர்கள் எங்களுடைய கோரிக்கைகளை எழுதித் தரும்படி கேட்டார்கள்.
ரஜினிகாந்த் குசேலன் படத்தில் தனது பங்கு 25 சதவீதம் கூட இல்ைல என்று கூறி விட்டார். வழக்கமாக ரஜினி படங்களுக்கு ரசிகர்கள் கொடுக்கும் ஆடம்பரத்தை, குசேலன் படத்திற்கு சற்று குறைத்துக் கொள்ளும்படி படம் வருவதற்கு முதல் நாள் அகில இந்திய ரஜினிகாந்த் மன்ற பொறுப்பாளர் சத்தியநாராயணா கூறினார்.
படம் சரியாக ஓடவில்ைல என்று சென்னையில் உள்ள சாய்மீரா நிறுவனம், ரஜினிகாந்த், கவிதாலயா நிறுவனம், இயக்குநர் வாசு ஆகியோருக்கு கடிதம் எழுதினோம்.
ரஜினிக்கு அனுப்பிய கடிதம் ரிட்டர்ன்
இதில் ரஜினிக்கு அனுப்பிய கடிதம் எங்களிடமே திரும்பி வந்து விட்டது. இந்தச் சூழ்நிலையில், ரஜினிகாந்த் கவிதாலயா நிறுவனத்திற்கு ரூ 10 கோடிைய கொடுத்து விட்டதாக ஒரு இணையதளத்திலும், 100 மில்லியன் டாலர் கொடுத்து விட்டதாக இன்னொரு இணையதளத்திலும் செய்திகள் வெளியாகியுள்ளன
ஆனால் சாய்மீரா நிறுவனத்திடம் கேட்டால், இன்னும் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம் என்கிறார்கள். பிரச்சினையில் ரஜினிகாந்த் தலையிட்டு தீர்வு காண வேண்டும். கொடுத்துள்ள பணத்திற்கு படம் ஓடி முடியும் வரையிலான வசூலை வைத்து சதவீத அடிப்படையில், பணத்தை திருப்பித் தர வேண்டும்.
இல்லையென்றால், இனி வரும் காலத்தில் கவிதாலயா, ரஜினிகாந்த், விநியோகஸ்தர் ஐங்கரன் நிறுவனம், தயாரிப்பாளர் விஜயக்குமார் ஆகியோரின் படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம்.
ஐங்கரன் ரோபோ படத்தை எடுக்கவுள்ளது. திருவண்ணாமலை என்ற படத்தையும் எடுத்து வருகின்றனர். இவற்றுக்கு ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் நாளை சென்னையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க கூட்டம் நடைபெறவுள்ளது. அப்போது குசேலன் பட நஷ்டம் தொடர்பாக மாநிலம் முழுவதும் உள்ள தியேட்டர் உரிமையாளரக்ள் கூடி முக்கிய முடிவு எடுக்கவுள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!













Click it and Unblock the Notifications