புதுப்பட்டினம் சம்பவம்: 'ஜாதி-மத மோதல் அல்ல'
சென்னை: புதுப்பட்டினத்தில் நடந்த சம்பவம் போதையில் வந்தவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட தகராறே தவிர ஜாதி-மத மோதல் அல்ல என்று தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பு செயலாளர் புதுப்பட்டினம் எஸ்.ஜாகீர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொள்வதற்காக புதுச்சேரி மற்றும் கடலூர் மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள், புதுப்பட்டினத்தில் இறங்கி அங்குள்ள உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்க மறுத்ததால் தகராறு ஏற்பட்டது.
உணவக உரிமையாளர் பாஷா உள்பட 5 பேர் ஆயுதங்களால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்தனர். இந்த தகராறில் முஸ்லிம்கள் நடத்தும் 15 கடைகள் தாக்குதலில் பாதிக்கப்பட்டன.
உடனடியாக காவல்துறையினர் விரைந்து வந்து கலவரம் செய்தவர்களை விரட்டி, நிலைமையைக் கட்டுப்படுத்தி பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்தனர். உடைமைகள் காப்பாற்றப்பட்டன.
இதுபற்றி அறிந்த தலைவர் கே.எம்.காதர் முகைதின் என்னிடம் நிலைமையைக் கேட்டறிந்தார். இச்சம்பவம் போதையில் வந்தவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறே தவிர ஜாதி-மத மோதல் அல்ல. இதைத் தெளிவுபடுத்திய வியாபாரிகள் சங்கத் தலைவர் வெள்ளையன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோருக்கு நன்றி.
பாதிக்கப்பட்ட வியாபாரிகள், படுகாயமடைந்தவர்கள் அனைவருக்கும் முதல்வர் உதவ வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications