நானோ-டாடாவுக்கு மகாராஷ்டிரம் 'சிவப்பு கம்பளம்'
மும்பை: ஒரு லட்சம் ரூபாய் கார் தொழிற்சாலையை மகாராஷ்டிராவில் அமைக்குமாறு டாடா நிறுவனத்துற்கு மகாராஷ்டிர மாநில முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் அழைப்பு விடுத்துள்ளார்.
டாடா நிறுவனம் நானே காரை தயாரிக்க மேற்கு வங்க மாநிலம் சிங்கூர் நகரில் தொழிற்சாலையை அமைந்துள்ளது. ஆனால், இந்த தொழிற்சாலைக்கு எதிராக மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி பெரும் போராட்டம் நடத்தி வருகிறது.
இதனால் உற்பத்தியை தொடங்க முடியாத நிலைக்கு டாடா நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது. வெறுப்படைந்த டாடா நிறுவன அதிபர் ரத்தன் டாடா, தொழிற்சாலையை மேற்கு வங்கத்தை விட்டே வேறிடத்துக்கு மாற்றிவிடுவோம் என எச்சரித்தார்.
ஆனாலும், மம்தா விட்டுத் தரும் நிலையில் இல்லை. டாடாவை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் மேற்கு வங்க முதல்வர் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் ஆலையை மகாராஷ்டிரத்தில் தொடங்குமாறு டாடா நிறுவனத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார் அம் மாநில முதல்வர் விலாஸ்ராவ்.
டாடாவுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்க நாங்கள் தயார். அவர் கேட்கும் நிலம், வசதிகளை நாங்கள் தரத் தயாராக உள்ளோம் என்று தேஷ்முக் கூறியுள்ளார்.
ஏற்கனவே ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக்கும் டாடாவுக்கு அழைப்பை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், சிங்கூர் தொழிற்சாலையை அமைக்க ரூ. 1,500 கோடி வரை செலவு செய்துவிட்டது டாடா நிறுவனம் என்பது நினைவுகூறத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications