13 அமைச்சர்கள்: ரூ.41.000 கோடி திட்டங்கள்
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த 13 மத்திய அமைச்சர்கள் காரணமாக திமிழகத்திற்கு ரூ.41 ஆயிரம் கோடி திட்டங்கள் கிடைத்துள்ளன.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவியேற்றபோது எந்த மாநிலத்திற்கும் இல்லாத அளவுக்கு தமிழகத்திற்கு அதிக அளவிலான அமைச்சர்கள் கிடைத்தனர்.
காங்கிரஸ் கட்சிக்கு ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், மணிசங்கர அய்யர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரும், திமுகவுக்கு டி.ஆர்.பாலு, ராஜா, வெங்கடபதி, ரகுபதி, பழனிமாணிக்கம், சுப்புலட்சுமி ஜெகதீசன், ராதிகா செல்வி ஆகியோரும், பாமகவுக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ், வேலு ஆகியோரும் அமைச்சர்களாக கிடைத்தனர்.
13 மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்குக் கிடைத்தது இதுவே முதல் முறையாகும். இத்தனை பேர் இருந்தும் தமிழகத்திற்கு என்ன லாபம் என அவ்வப்போது விமர்சனம் எழுந்து வருகிறது.
ஆனால் 13 பேரால் தமிழகத்திற்கு ரூ. 41,000 கோடி திட்டங்கள் கிடைத்துள்ளது. மொத்தமாக 62 திட்டப் பணிகள் நமக்குக் கிடைத்துள்ளன. இதில் 33 திட்டங்கள் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர். பாலுவின் மூலமாக வந்துள்ளன.
இதுவரை இந்த அளவுக்கு தமிழகத்திற்கு திட்டங்கள் கிடைத்ததில்லை என்பது தான் இதில் விசேஷம். கடந்த நான்கரை ஆண்டு கால ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நாட்டிலேயே இந்த அளவுக்கு திட்டங்களைப் பெற்றிருப்பது தமிழகம் மட்டுமே.
திட்டப் பணிகளைப் பொறுத்தவரை மகாராஷ்டிராவுக்காத்தான் அதிகமாக 76 திட்டங்கள் கிடைத்துள்ளன. ஆனால் நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துத்து அடுத்த இடத்தில்தான் அந்த மாநிலம் உள்ளது.
அதே போல பீகார் மாநிலம் 51 திட்டப் பணிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. இதற்கு லாலு பிரசாத் முக்கிய காரணம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications