ஆண்டிப்பட்டி அதிமுக பஞ். தலைவி திமுகவில் ஐக்கியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆண்டிப்பட்டி முன்னாள் அதிமுக பஞ்சாயத்து தலைவியான மலர்விழி முதல்வர் கருணாநிதி முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.

ஆண்டிப்பட்டி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வென்ற தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் கருணாநிதி பங்கேற்ற மதுரையில் நடந்த அரசு விழாவில் மலர்விழி கலந்து கொண்டதையடுத்து அவருக்கு அதிமுகவில் கடும் நெருக்கடி தரப்பட்டு வந்தது. மேலும் அவரை கட்சியை விட்டும் நீக்கினார் ஜெயலலிதா.

இந் நிலையில் இன்று சென்னை வந்த அவர் கோபாலபுரத்தில் உள்ள முதல்வரின் இல்லத்தில் அவரை சந்தித்து திமுகவில் இணைந்தார்.

மலர்விழியை திமுகவுக்குள் இழுத்ததில் அழகிரி முக்கிய பங்காற்றியுள்ளார். நேற்று அழகிரியை சந்தித்துவிட்டுத் தான் இன்று கருணாநிதியை மலர்விழி சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+