கருணாநிதி ஏர் பிடித்து உழுதாரா?: வைகோ
கோவில்பட்டி: தன்னை விவசாயி என்று கூறிக் கொள்ளும் முதல்வர் கருணாநிதி என்ன ஏர் பிடித்து உழுதாரா என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேட்டுள்ளார்.
கோவில்பட்டிக்கு வந்திருந்த வைகோ, அங்குள்ள கம்மவார் கல்யாண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் பேசுகையில், திமுகவிலிருந்து நான் வெளியேற்றப்பட்டபோது லட்சோப லட்சம் தொண்டர்கள் என்னுடன் வந்தனர். துன்பத்திலும், துயரத்திலும், சிறையிலும், தோல்வி ஏற்பட்ட போதும் என்னுடன் தொண்டர்கள் உள்ளனர்.
முதல்வர் கருணாநிதி தன்னை விவசாயி என்று கூறி கொள்கிறார். அவர் என்ன ஏர் பிடித்து உழுதாரா...கரிசல்காட்டில் பிறந்த எனக்கு விவசாய பணிகள் அனைத்தும் தெரியும். கட்சிக்காக உழைத்த என்னை கொலைகாரன் என பட்டம் சூட்டி ஒரே நாளில் தூக்கி எறிந்தார் கருணாநிதி. இல்லாத கொடுமையை கருணாநிதி அன்றைக்கு செய்தார். ஆனால் கட்சியை விட்டு தூக்கியேறிப்பட்டாலும் எனக்கு வாக்களித்து என்னை பாதுகாத்தீர்கள்.
இப்போது நான் நல்ல கூட்டணியில் உள்ளேன். அதிமுக பொது செயலாளர் என்னையோ, என் கட்சியையோ அழிக்க நினைக்கவில்லை. என்னோடு இருப்பவர்களை பாதுகாப்பது என் கடமை என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications