ரெட்டணை-போலீஸை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்: ரெட்டணை துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தமிழக காவல் துறையை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் ரெட்டனை கிராமத்தில், வேலை உறுதியளிப்பு திட்டத்தின் அடிப்படையில் வேலைக்குச் சென்றவர்களுக்கு கூலி குறைவாக வழங்கப்பட்டது. இதை கண்டித்தும், ரூ.80 கூலி தர வேண்டும் என்று கோரி கடந்த 16ம் தேதி தொழிலாளர்கள் சாலை மறியல் செய்தனர்.
அப்போது அங்கு வந்த அதிரடிப்படையினரும் , காவல் துறையினரும் மறியல் செய்தவர்கள் மீது சரமாரியாக தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சிபிஎம் ஊராட்சிமன்ற தலைவர் கலைச்செல்வன், அவரது சகோதரர் சட்டக் கல்லூரி மாணவர் தமிழரசை, முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் ராமலிங்கம் உள்பட 25க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலர் படுகாயமடைந்தனர்.
இதில், மூர்த்தி என்ற இளைஞருக்கு முதுகில் குண்டு பாய்ந்து புதுவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.
வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினரின் அத்துமீறலினால்தான் தடியடி, துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது என்று கூறிய சிபிஎம், இந்த சம்பவத்திற்கு கண்டனமும் தெரிவித்தது.
இந்த நிலையில், ரெட்டணை துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தமிழக காவல்துறையை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று சிபிஎம் அறிவித்துள்ளது.
அதன்படி வட சென்னையில் நடைபெறும் ஆர்பாட்டத்தில் டி.கே.ரங்கராஜன் எம்பி, டி.கே.சண்முகம், கே.கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications