உலக ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள்!

ஒரு நாளைக்கு 1.25 டாலருக்குக் குறைவான வருமானத்தில் வசிப்போரை வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதாக உலக வங்கி கருதுகிறது.
அதன்படி இந்தியாவில் 42 சதவீதம் மக்கள், அதாவது சுமார் 46 கோடி பேர் வறுமையில் வாழ்வதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இது உலக அளவிலான ஏழை மக்களில் 33 சதவீதமாகும்.
அதே நேரத்தில் இந்தியாவில் வறுமை மெதுவாக ஆரம்பித்துள்ளதாகவும் உலக வங்கியின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
1981-1990ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தை விட 1990-2005ம் ஆண்டு காலத்தில் இந்தியாவில் வறுமையில் வாழ்வோரின் எண்ணிக்கை 0.7 சதவீதம் அதிகமாக குறைந்துள்ளது.
அதிலும் 2002ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டுக்கள் வறுமையிலிருந்து மீண்ட மக்களின் எண்ணிக்கை சுமார் 4.7 கோடியாகும்.
அதே நேரத்தில் இந்தியாவில் தினமும் 2 டாலருக்குக் குறைவான வருமானம் கொண்டவர்கள் எண்ணிக்கை 83 கோடியாகும். அதாவது மக்கள் தொகையில் 75 சதவீதம் பேரின் வருமானம் தினமும் 2 டாலருக்கும் குறைவு தான்.
இது சில ஆப்பிரிக்க நாடுகளை விட மோசமான நிலையாகும்.
உலக வங்கியின் இந்த ஆய்வறிக்கை 2005ம் ஆண்டு வரையிலான கணக்கின் அடிப்படையிலேயே வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்கள், முன்னேற்றங்கள் அதில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 3 ஆண்டுகளில் அதிவேக பொருளாதார வளர்ச்சியை எட்டிப் பிடித்து இப்போது கொஞ்சம் மூச்சு வாங்கிக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications