சென்னையில் 50 ஏக்கரில் மெகா கிரிக்கெட் ஸ்டேடியம்
சென்னை: சென்னை அருகே உலகிலேயே மிகப் பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் உருவாகவுள்ளது. இந்த ஸ்டேடியம் கட்டி முடிக்கப்பட்டால், மெல்போரன், கொல்கத்தாவின் ஈடன் கார்டன் ஸ்டேடியங்கள் சின்ன ஸ்டேடியங்களாகி விடும்.
2011ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ளன. அப்போது சென்னைக்கு புதிய பிரமாண்ட கிரிக்கெட் ஸ்டேடியத்தை நிர்மானிக்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக சென்னையிலிருந்து 25 கி.மீட்டர் தொலைவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கருங்குழிப்பள்ளம் என்ற இடத்தில் 50 ஏக்கர் இடம் வாங்கப்பட்டுள்ளது.
உலகிலேயே மிகப் பெரிய, அதி நவீன வசதிகளுடன் கூடிய ஸ்டேடியமாக இதை உருவாக்கப் போகிறார்கள். தமிழக அரசுடன் கலந்து ஆலோசித்த பின்னர் ஸ்டேடியத்திற்குப் பெயர் சூட்டப்படவுள்ளது.
அளவிலும், சீட் வகையிலும், இந்த ஸ்டேடியம்தான் உலகிலேயே மிகப் பெரிதாக இருக்கும் வகையில் இது கட்டப்படவுள்ளது. விரைவில் இதற்கான காண்டிராக்டரை இறுதிசெய்யவுள்ளது கிரிக்கெட் சங்கம்.
இந்த ஸ்டேடியத்தின் முக்கிய அம்சமாக மழை பெய்யும்போது ஸ்டேடியத்தை மூடும் வகையிலான மேற் கூரையும் பொருத்தப்படவுள்ளது. இதனால் ஆட்டம் நடந்து கொண்டிருக்கும்போது மழை வந்தாலும் ஆட்டம் நிற்காமல் தொடர்ந்து அதிரடியாக நடந்து கொண்டிருக்கும்.
இதுகுறித்து கிரிக்கெட் சங்கத் தலைவர் என்.சீனிவாசன் கூறுகையில், உலகத் தரத்துடன் கூடியதாக இந்த ஸ்டேடியம் இருக்கும். ஸ்டேடியம் அமையவுள்ள இடத்தை 30 ஆண்டு குத்தகைக்கு அரசு வழங்குகிறது. இதற்காக ரூ. 1 லட்சம் கட்டணத்தை நாங்கள் கட்டியுள்ளோம்.
ஸ்டேடியம் தொடர்பான பணிகளை இறுதி செய்ய சங்கத்தின் செயற்குழு வியாழக்கிழமை கூடி திட்டமிடவுள்ளது.
ஸ்டேடிய வளாகம் 30 ஏக்கரில் அமையும். ஈடன் கார்டன் மற்றும் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானங்களில் இருப்பதை விட கூடுதலான ரசிகர்கள் இங்கு அமர முடியும் என்றார் அவர்.
தற்போது மெல்போரன் மைதானம் தான்மிகப் பெரியது. அதில் 1 லட்சம் பேர் அமர முடியும். ஈடன் கார்டன் மைதானத்தில் 90 ஆயிரம் பேரை 'அடைக்கலாம்' என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications