தியேட்டர்களை லாட்ஜுகளாக்கும் காதல் ஜோடிகள்!
கரூர்: கரூர் நகரில் உள்ள தியேட்டர்களில் பொழுதுபோக்க வருகிறோம் என்ற பெயரில் காதலர்கள் பலர் 'சில்மிஷ கசமுசா' வேலைகளில் ஈடுபட்டு வருவதால் 'ஜென்யூன்' ரசிகர்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கரூரில் டெக்ஸ்டைல்ஸ், சாயப்பட்டரை, கொசுவலை போன்ற தொழில்கள் மிப் பிரபலம். இந்த தொழில்களுக்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து ஆண்களும் பெண்களும் வேலைக்கு வருகின்றனர். குறிப்பாக பெண்கள் அதிக அளவில் வருகின்றனர்.
கிராமப்புறங்களில் இருந்து இப்படி வருபவர்கள் பெரும்பாலும் பஸ், ரயில்களில் வருகின்றனர். இப்படி வரும் போது கண்களும் கண்களும் நோக்கி திடீர் காதல் ஊற்றெற்று விடுகிறது.
இப்படி காதல் வலையில் விழும் பெண்களும், ஆண்களும், வேலைக்கு வருவதாக வீட்டில் கூறி விட்டு வேலைக்கு போகாமல் தியேட்டர்களுக்குப் போய் விடுகிறார்கள். அவர்கள் போகும் தியேட்டர்கள் எல்லாம்
கூட்டமே இல்லாமல் 'காத்து வாங்கிக் கொண்டிருக்கும்' தியேட்டர்களாகத்தான் பெரும்பாலும் இருக்கிறது.
அங்கு தான் அதிக கூட்டம் இருக்காது. அதனால் அதிக தனிமை கிடைக்கும், அப்போதுதானே 'கொட்டத்திற்கு' வசதியாக இருக்கும் என்பதால் இப்படி செலக்ட் செய்து 'கனெக்ட்' ஆகிறார்கள்.
தியேட்டரில் விளக்குகள் அணைந்து, படம் ஓட ஆரம்பித்ததுமே இந்த காதல் ஜோடிகளின் காதல் படம் களை கட்ட ஆரம்பித்து விடுகிறது. மேக்ஸிமம் எந்த அளவுக்குப் போக முடியுமோ அந்த அளவுக்குப் போய் விடுகிறார்கள். சீட்களிலிருந்து மாயமாகியும் விடுகிறார்கள்.
ஆனால் தியேட்டருக்கு வரும் எல்லோருமே இந்த ஒரு சிலர் போல இருப்பதில்லை. உண்மையாகவே படம் பார்க்க வருபவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு, இந்த காதல் ஜோடிகளின் மன்மத லீலைகள் மகா கஷ்டமாகவும், கடுப்பாகவும், கோபத்தையும் ஏற்படுத்துகின்றன.
தியேட்டர்களை கிட்டத்தட்ட லாட்ஜ் ரேஞ்சுக்கு கொண்டு வந்து கொண்டிருக்கும் இதுபோன்ற காதல் ஜோடிகளை அறிவுரை கூறி அவர்களின் சில்மிஷங்களுக்கு தடை போட வேண்டும். படம் பார்க்க வருபவர்களுக்கு ஏற்படும் அசவுகரியங்களைக் களைய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications