'பதவி போராட்டம்'-கருணாநிதியுடன் ரங்கசாமி சந்திப்பு
புதுச்சேரி: புதுவையில் அதிகமான எம்எல்ஏக்களின் ஆதரவு அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு கிடைத்துள்ளதால் அவரை முதல்வர் பதவியில் அமர்த்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ரங்கசாமிக்கு அவர் உள்பட இரண்டு பேரின் ஆதரவு மட்டுமே கிடைத்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்த வருகிறது. ரங்கசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள 5 அமைச்சர்கள், அவரை மாற்ற வேண்டும் என்று அடம்பிடிப்பதால் அம்மாநில அரசு நெருக்கடியை சந்தித்துள்ளது.
இந்நிலையில் கடந்த நேற்று முன்தினம் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டம் புதுவையில் நடந்தது. மேலிடப் பார்வையாளர்களான வயலார் ரவி, அருண்குமார், மத்திய அமைச்சர் நாராயணசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர். இறுதியில், முடிவு எடுக்கும் அதிகாரம் கட்சி தலைவர் சோனியா வசம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மாற்றப்படுவார், அடுத்த முதல்வர் யார் என்பது ஒரிரு நாளில் அறிவிக்கப்பட உள்ளது என்று தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன. ரங்கசாமி மாற்றப்பட்டால் தற்போதைய அமைச்சரும் முன்னாள் முதல்வருமான வைத்திலிங்கம் முதல்வராகும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ரங்கசாமிக்கு போதிய ஆதரவு இல்லை. ரங்கசாமிக்கு அவருடைய ஆதரவாளரான அங்காளன் மட்டும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
முதல்வரின் நெருங்கிய உறவினரான நமசிவாயம் கூட 'போர்க்கொடி' அமைச்சர்கள் அணியில் சேர்ந்துவிட்டாராம். கடந்த 2 மாதங்களாக புதுவையில் இல்லாத அவர், எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு வைத்திலிங்கத்துக்கு ஆதரவு தெரிவித்துவி்ட்டார்.
மொத்தமுள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களில் முதல்வருக்கு அவர் உள்பட 2 பேரின் ஆதரவும், வைத்திலிங்கத்துக்கு அவர் உள்பட 6 பேரின் ஆதரவும் கிடைத்துள்ளது.
மீதமுள்ள 2 பேர், சட்டசபை தலைவர் ராதாகிருஷ்ணன், சட்டசபை துணைத் தலைவர் ஸ்ரீதரன் ஆகியோர் நடுநிலை வகிக்கின்றனர்.
நியமன எம்எல்ஏவான தியாகராஜனும் வைத்திலிங்கத்தின் பக்கம் உள்ளார். காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு அளிக்கும் 3 சுயேச்சை எம்எல்ஏக்களும் வைத்திலிங்கத்துக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். இதனால் வைத்திலிங்கத்தின் கை ஓங்கியுள்ளது.
கருணாநிதி, ராமதாசுடன் ரங்கசாமி சந்திப்பு:
இந் நிலையில் தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள முதல்வர் கருணாநிதி மற்றும் பாமக தலைவர் ராமதாசின் உதவி கோரி அவர்களை ரங்கசாமி நேரில் சந்தி்த்தார். ஆனால், உங்கள் கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிட முடியாது என இருவரும் கைவிரித்துவிட்டதாகத் தெரிகிறது.
மேலும் கருணாநிதி-ராமதாஸ் மூலம் தனக்கு நெருக்கடி கொடுக்க முயன்ற ரங்கசாமி மீது காங்கிரஸ் தலைவர் சோனியாவும் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் முதல்வர் பதவியில் ரங்கசாமி தொடர்வது கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் அவர் மாற்றப்பட்டால், முதல்வர் பதவியில் அமரும் அதிகபட்ச வாய்ப்பு வைத்திலிங்கத்துக்கு பிரகாசமாக உள்ளது.
முதல்வர் பதவிக்கு முன்பு போட்டியிட்ட சட்டசபை தலைவர் ராதாகிருஷ்ணனும் இப்போது ஒதுங்கிக் கொண்டதால் முதல்வர் பதவிக்கு தற்போது போட்டி எதுவும் இல்லை.
எனவே ரங்கசாமி மாற்றப்படும் பட்சத்தில் வைத்திலிங்கம் முதல்வர் பதவியை ஏற்பார் என்று தெரிகிறது.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதுச்சேரியில் மது அருந்த வந்தவர்களுக்கு சினிமா பாணியில் ட்விஸ்ட்.. போலீஸ் அதிரடி -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
அலையவிடும் ரங்கசாமி.. ஏக கடுப்பில் பாஜக எம்எல்ஏக்கள்.. இப்படி பண்ணிட்டாரே.. அமித் ஷா அப்செட்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!











Click it and Unblock the Notifications