என்எஸ்ஜி திருத்த வரைவறிக்கை தயார்: நாளை இந்தியாவுக்கு கிடைக்கும்
டெல்லி: அணு சப்ளை குழுமமான என்எஸ்ஜியிடம் வழங்கவுள்ள புதிய திருத்த வரைவறிக்கையை அமெரிக்கா தயார் செய்து விட்டது. நாளை இது இந்தியாவிடம் வழங்கப்படும் எனத் தெரிகிறது.
சமீபத்தில் என்.எஸ்.ஜி. கூட்டம் வியன்னாவில் நடந்தது. அப்போது பாதிக்கும் மேற்பட்ட நாடுகள், இந்தியாவுக்கு நிபந்தனையற்ற சலுகைகள் வழங்க எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் பல்வேறு நிபந்தனைகளையும் அவை முன்வைத்தன.
இதையடுத்து வரைவறிக்கையில் திருத்தம் செய்ய இந்தியாவும், அமெரிக்காவும் முடிவு செய்தன. இந்தப் பணியை அமெரிக்கா மேற்கொண்டது. தற்போது திருத்த வரைவறிக்கை தயாராகி விட்டது.
இந்த வரைவறிக்கை இந்தியாவிடம் நாளை தரப்படும் எனத் தெரிகிறது. இந்தியாவின் கவலைகளையும், என்.எஸ்.ஜி. உறுப்பினர்களின் கவலைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்தியாவின் கோரிக்கைக்கு பலமாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுளின் தூதர்களுடன் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் டேவிட் முல்போர்ட் வியாழக்கிழமை பேச்சு நடத்தினார் என்பது நினைவிருக்கலாம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications