வாசு வீட்டை முற்றுகையிட்ட சவரத் தொழிலாளர்கள் கைது
சென்னை: குசேலன் படத்தில் சவரத் தொழிலாளர்களை இழிவுபடுத்துவது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதற்குக் கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு முடிதிருத்துவோர் நலச் சங்கம் சார்பில் இன்று சென்னையில் உள்ள இயக்குநர் பி.வாசுவின் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. அவர்களை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
குசேலன் படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களை இழிவுபடுத்துவது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாக கூறி படத்தின் இயக்குநர் பி.வாசுவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு முடி திருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் அறிவித்தது.
அதன்படி இன்று காலை கோபாலபுரத்தில் உள்ள வாசுவின் வீடு அருகே நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் திரண்டனர். அனைவரும் பி.வாசுவை கண்டித்து கோஷமிட்டனர். பின்னர் வாசு வீட்டை நோக்கி நகரத் தொடங்கினர். அப்போது போலீஸார் அவர்களைத் தடுத்து கைது செய்தனர்.
சவரத் தொழிலாளர்களை இழிவுபடுத்தும் வகையிலான காட்சிகளை நீக்காவிட்டால் குசேலன் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் அடுத்து போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications