மண்டல விழாக்கள்-மக்களவை தேர்தலுக்கு தயாராகும் திமுக
மக்களவைத் தேர்தலை சந்திக்க திமுக தொண்டர்களை தயார் செய்யும் வகையில் மாநிலம் முழுவதும் மண்டல விழாக்கள் நடத்தப்படவுள்ளன.
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.
சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்:
அண்ணா நூற்றாண்டு விழாவை உலகமே வியக்கத்தக்க வகையில் ஓராண்டுக்கு ஊர், நகரம் என இதுவரை இப்படி ஒரு விழா எங்குமே நடந்ததில்லை என்ற அளவுக்கு சீரோடும், சிறப்போடும் கொண்டாடுவது என்றும், கட்சியின் முன்னணி தலைவர்கள் மற்றும் அமைச்சர்களை அழைத்து பட்டிமன்றம், கவியரங்கம், கருத்தரங்கம் ஆகியவற்றை நடத்துவது.
அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி சென்னையில் நடைபெறும் அண்ணா நூற்றாண்டு தொடக்க விழா கவியரங்கத்திற்கு முதலமைச்சர் கருணாநிதி தலைமை வகிப்பார்.
அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி அவருடைய வளர்ப்பு மகன்களான மறைந்த சி.என்.ஏ.பரிமளம் மற்றும் இளங்கோவன், கௌதமன், பாபு ஆகியோரின் குடும்பத்தினருக்கு சென்னையில் நடைபெறவிருக்கும் நூற்றாண்டு விழாவில் தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும்.
மண்டல விழாக்கள்:
21ம் தேதி திருச்சியில் முப்பெரும் விழா நடைபெறும். திருச்சி, பெரம்பலூர், கரூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல விழாவாக நடத்தப்படும்.
நவம்பர் மாதம் கோவை, ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களின் மண்டல விழா கோவையிலும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல விழா நெல்லையிலும் நடத்தப்படும்.
மார்ச் மாதம் சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களின் மண்டல விழா சேலத்திலும், மே மாதம் தஞ்சையில், தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களின் மண்டல விழாவும், ஜூன் மாதம் மதுரையில், மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் மாவட்டங்களின் மண்டல விழாவும் நடைபெறும்.
ஜூலை மாதம் காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல விழா காஞ்சிபுரத்திலும், வடசென்னை, மத்தியசென்னை, தென்சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல விழா சென்னையிலும் நடைபெறும்.
இதுதவிர மாவட்டங்களின் சார்பில் ஆங்காங்கே விழாக்களை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள கட்சியினரை தயார் செய்யவும், தேர்தலுக்கான நிதி திரட்டவும் இந்த மண்டல விழாக்களை திமுக நடத்தவுள்ளது.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications