கோளாறு: வழியில் நின்ற பாண்டியன் எக்ஸ்பிரஸ்
சென்னை: சென்னையில் இருந்து புறப்பட்ட பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜின் கோளாறு காரணமாக பாதி வழியிலேயே நின்றது.
எழும்பூரில் இருந்து நேற்றிரவு 9.30 மணிக்கு புறப்பட்ட இந்த ரயில் நள்ளிரவு 1 மணி அளவில் திருச்சி அருகே லால்குடியில் சென்று கொண்டிருந்தபோது என்ஜின் கோளாறு ஏற்பட்டது. இதனால் ரயில் நிறுத்தப்பட்டது.
பின்னர் திருச்சியில் இருந்து மாற்று என்ஜின் வரவழைக்கப்பட்டு பொருத்தப்பட்டு 4 மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டது. அதிகாலை 5.45 மணிக்கு திருச்சி சென்றடைந்த ரயில் காலை 6 மணிக்குப் பதிலாக 10 மணிக்குதான் மதுரையை அடைந்தது.
நடுவழியில் ரயில் நின்றதால் காலையில் பசியில் அழுத குழந்தைகளுக்கு பால், பிஸ்கெட் கூட எதுவும் வாங்க முடியாமல் பயணிகள் திணறினர். இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீஸ் டிஐஜி சிவனாண்டி ரயில்வே போலீசாரை தொடர்பு கொண்டு உடனடியாக ரயிலில் பால் சப்ளை செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து ரயில்வே போலீசார் பிளாஸ்க்குகளில் பால் கொண்டு வந்து குழந்தைகளுக்கு வழங்கினர். சபாஷ் போலீ்ஸ்!
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications