செப்.15 முதல் ஒரு ரூபாய்க்கு அரிசி: கருணாநிதி!

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்தது.
இதில் அமைச்சர்கள், அனைத்து மாவட்டச் செயலாளர்கள், மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ரகுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒன்றாக,
நியாய விலைக் கடைகளில் தற்போது வழங்கப்படும் உளுந்து, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவற்றை தொடர்ந்து குறைந்த விலைக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை இந்த கூட்டம் வலியுறுத்துகிறது.
அதேபோல, தமிழகத்திலுள்ள நியாய விலைக் கடைகளில் கிலோ ரூ.2 வீதம் 20 கிலோ அரிசி மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அண்ணா நூற்றாண்டு விழா தொடக்க நாளான செப்டம்பர் 15 முதல் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் வீதம் வழங்க வேண்டும் என்று முதலமைச்சரையும், தமிழக அரசையும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வேண்டிக் கொள்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர்,
அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் கிலோ அரிசி ரூ.1க்கு வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் சுமார் 1 கோடியே 86 லட்சம் குடும்ப அட்டைக்காரர்கள் பயனடைவார்கள்.
இது குறித்து இன்று மாலை நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
இதனால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு சுமார் ரூ. 400 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்றார்.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியபடி கிலோ அரிசி ரூ.2க்கு தற்போது வழங்கி வருகிறது. இந்நிலையில் விலையை மேலும் குறைத்து ரூ.1க்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருணாநிதி குறித்து வதந்தி:
முன்னதாக முதல்வர் கருணாநிதி குறித்து சென்னையின் சில இடங்களில் இன்று வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட பகுதிகளில் இன்று சிலர் முதல்வர் கருணாநிதி குறித்து வதந்தி பரப்பினர். இதையடுத்து திமுக கொடிக் கம்பங்களில் இருந்த கொடிகளை அரைக் கம்பத்திலும் பறக்க விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இருப்பினும் அது வதந்தி என்று தெரிய வந்ததால் உடனடியாக கொடிகள் சரியான முறையில் பறக்க விடப்பட்டன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications