புதுவை-வைத்திலிங்கம் 3ம் தேதி பதவியேற்பு
புதுச்சேரி: புதுச்சேரி முதல்வராக வைத்திலிங்கம் வரும் 3ம் தேதி பதவியேற்பார் என்று தெரிகிறது.
ரங்கசாமி முதல்வர் பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். பின்னர் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் வைத்திலிங்கம் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதங்களையும், திமுக, பாமகவின் நிபந்தனையற்ற ஆதரவு கடிதங்களையும் ஆளுநர் கோவிந்த் சிங்குர்ஜாரை சந்தித்து வைத்திலிங்கம் வழங்கினார்.
புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் புதிய ஆட்சி அமைக்க ஜனாதிபதியின் ஒப்புதல் அவசியமாகும். ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அறிக்கை ஒன்றை டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளார் ஆளுநர்.
இந்த ஒப்புதல் மற்றும் மற்ற சம்பிரதாயங்கள் முடிந்து வரும் 3ம் தேதி புதிய முதல்வராக வைத்திலிங்கம் பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது.
பதவி ஏற்பு விழா ஆளுநர் மாளிகை வளாகத்தில் நடைபெறுகிறது. புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் கோவிந்த்சிங் குர்ஜார் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.
இதனிடையே நேற்று டெல்லிப் புறப்பட்டுச் சென்ற வைத்திலிங்கம், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது பட்டேலை சந்தித்து பேசினார். மேலும் கட்சியின் மூத்த தலைவர்களையும் அவர் சந்தித்தார்.
அங்கு செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், இலாக்காக்கள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பரவிய செய்திகள் உண்மையல்ல. காங்கிரஸ் கட்சியின் 10 எம்எல்ஏக்களும் ராணுவ சிப்பாய்கள் போல செயல்படுவார்கள். புதுவை நிர்வாகம் மறுசீரமைக்கப்பட்டு, தற்போது நிலுவையில் உள்ள அனைத்து திட்டங்களும் விரைவுபடுத்தப்படும் என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
புதுச்சேரியில் மது அருந்த வந்தவர்களுக்கு சினிமா பாணியில் ட்விஸ்ட்.. போலீஸ் அதிரடி -
அலையவிடும் ரங்கசாமி.. ஏக கடுப்பில் பாஜக எம்எல்ஏக்கள்.. இப்படி பண்ணிட்டாரே.. அமித் ஷா அப்செட்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications