மத்திய தொகுப்பிலிருந்து கூடுதல் மின்சாரம்: அரசு தீவிர முயற்சி
சென்னை: தமிழகத்தில் நிலவும் மின் தட்டுப்பாடு பிரச்னைக்கு தீர்வு காண, மத்திய அரசிடம் இருந்து கூடுதலாக 200 மெகாவாட் மின்சாரம் வாங்குவதற்கு தமிழக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மின் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. மாநிலம் முழுவதும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஷிப்ட் முறையில் அமல்படுத்தப்பட்டு வரும் மின்வெட்டால் மக்கள் பெரும் அவதியுற்றுள்ளனர்.
சென்னையில் ஒரு மணிநேரமும், மற்ற மாவட்டங்களில் தினமும் 2 மணிநேரம் மின்வெட்டு அறிவிக்கப்பட்டாலும், கூடுதலாகவே மின் விநியோகம் இருப்பதில்லை என்று மக்கள் குறை கூறுகின்றனர்.
தமிழகத்தில் தற்போது கடுமையான மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க மத்திய தொகுப்பில் இருந்து கூடுதலாக மின்சாரம் பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்ைக எடுத்து வருகிறது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், குறைந்தபட்சம் 200 மெகாவட் மின்சாரம் மத்திய தொகுப்பில் இருந்து வாங்குவதற்கு மாநில அரசு முயற்சித்து வருகிறது. இதில் 100 மெகாவாட் மின்சாரமாவது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஒரு யூனிட், வழக்கமான பராமரிப்பு பணிக்காக உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த யூனிட்டின் பராமரிப்பு பணிகள் முடிவடைந்து இன்று முதல் மீண்டும் செயல்பட தொடங்குகிறது. இதனால் மேலும் கூடுதலாக 100 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்று தெரிவித்தனர்.
தவிர, கூடுதல் விலை கொடுத்தாவது மற்ற மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கலாமா என்று மின்வாரியம் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications