அண்ணா நூற்றாண்டு விழா: 1000 ஆயுள் கைதிகள் விடுதலை
சென்னை: அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி செப்டம்பர் 15ம் தேதி தமிழகம் முழுவதும் ஆயிரம் ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
தமிழகத்தில் சென்னை புழல், வேலூர், பாளையங்கோட்டை, கோவை, சேலம், திருச்சி, மதுரை, கடலூர் ஆகிய 8 இடங்களில் மத்திய சிறைகள் உள்ளன.
இந்த சிறைகளில் கொலை, கொள்ளை, மோசடி, கற்பழிப்பு, திருட்டு, வழக்குகளில் தண்டனை பெற்ற 20,120 கைதிகள் உள்ளனர்.
தலைவர்களின் பிறந்த நாளின்போது நன்னடத்தையுடன் இருக்கும் ஆயுள் கைதிகளை விடுவிப்பது வழக்கம். அதன்படி அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி 7 வருடத்திற்கு மேல் தண்டனை அனுபவித்த நன்னடத்தையுள்ள ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதற்கான கைதிகளை தேர்ந்தெடுப்பதற்கான விதி முறைகள் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள், சிறை அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் திரிபாதி கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆலோ சனை நடத்தினார்.
உணர்ச்சி வசப்பட்டு, எவ்வித ஆதாயமுமில்லாமல் கொலை செய்து ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை மட்டும் விடுவிப்பது என்றும் அவர்கள் குறைந்தபட்சம் ஏழு வருடம் சிறை தண்டனை பெற்றவர்களாகவும், நன்னடத்தை உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என்று விதிமுறை வகுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் போலீசாரின் உதவியோடு, 8 மத்திய சிறைசாலைகளிலும் புதுக்கோட்டை சிறையிலும் ஆயுள் கைதிகளின் பெயர் பட்டியலை சிறை அதிகாரிகள் தயாரித்துள்ளனர். சிறை சாலைக்கு 100 பேர் வீதம் 8 சிறைகளில் இருந்து 800 கைதிகளின் பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. புழல் ஜெயிலில் மட்டும் 200 பேர் இடம் பெற்றுள்ளனர். இதையடுத்து மொத்தம் 1000 பேர் விடுதலை செய்யப்பட உள்ளனர்.
இந்தபட்டியலில் இந்திய தண்டனை சட்டம் 302ன் கீழ் தண்டனை பெற்ற ஆயுள் கைதிகள் மட்டுமே இடம் பிடித்துள்ளனர். இதன் இறுதி கட்ட பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது.
அதில் பாலியல் பலாத்காரம், ஆணங்களை திருத்துதல், கொள்ளை, தீவிரவாத குற்றங்கள், அரசுக்கு எதிரான குற்றங்கள், பொருளாதார குற்றங்கள், பொருட்களை பதுக்குதல், கடத்தல், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்களை பாலியல் தொழிலுக்கு உட்படுத்துதல், போதை பொருள் கடத்தல், உணவு பொருள் கடத்தல், கலப்படம் செய்தல், ஊழல் செய்தல் போன்ற குற்றங் களுக்காக தண்டனை பெற்றவர்கள் யாரும் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி இந்த கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள்.
-
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு












Click it and Unblock the Notifications