அதிமுக கூட்டணியில் இடதுசாரிகள் இணைவார்களா?
சென்னை: திமுக கூட்டணியிலிருந்து விலகப் போகும் இடதுசாரிக் கட்சிகள் தேசிய அளவில் அமையவுள்ள 3வது அணியில் அதிமுகவுடன் அணி சேருவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் அதிமுக அணிக்கு இடதுசாரிகளைக் கொண்டு வருவது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தீவிரமாக இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தேசிய அளவில், ஐக்கியமுற்போக்குக் கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்ட இடதுசாரிகள், புதிதாக உருவாகியுள்ள 3வது அணியில் இடம் பெற்றுள்ளனர். இந்த அணியில் அதிமுகவையும் சேர்க்க முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
அதேசமயம், தமிழகத்தில் அதிமுக கூட்டணிக்கு இடதுசாரிகளைக் கொண்டு வர ஜெயலலிதா தீவிரம் காட்டி வருகிறார். இதற்காக அவர் வைகோ மூலம் இடதுசாரிகளுக்கு தூது விட்டுள்ளதாக தெரிகிறது.
இடதுசாரிகளை அதிமுக அணிக்கு இழுக்கும் முயற்சியில் இறங்கியுள்ள வைகோ, இடதுசாரி கட்சிகளின் அகில இந்திய தலைவர்களை சந்தித்துப் பேசியுள்ளார்.
விரைவில் தமிழக தலைவர்களுடன் பேச்சு நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார். பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து முடிந்தால் அதிமுக அணிக்கு இடதுசாரிகள் வரக் கூடும்.
காங்கிரஸுடன் சேரக் கூடாது, காங்கிரஸ் இடம்பெற்றுள்ள கூட்டணியில் இருக்கக் கூடாது. இதற்காக ஒத்த கொள்கை உடைய கட்சிகளுடன் அணி சேருவது என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ள இடதுசாரிகள், அதிமுக அணிக்கு வரக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக கூறப்படுகிறது.
-
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications