'நெகட்டிவ் லிஸ்ட்'டில் மோடி: விசா கிடைக்க வாய்ப்பில்லை!
வாஷிங்டன்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தொடர்ந்து அமெரிக்க அரசின் 'நெகட்டிவ் லிஸ்ட்'டில் இருப்பதால் அவருக்கு விசா கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் கலவரத்தைத் தொடர்ந்து கடந்த 2005ம் ஆண்டு அமெரிக்கா செல்ல மோடி விண்ணப்பித்தார். ஆனால் மோடிக்கு விசா தரக் கூடாது என அமெரிக்காவை பல்வேறு தரப்பினரும் கேட்டுக் கொண்டதால் அவருக்கு அமெரிக்க அரசு விசா மறுத்தது.
சமீபத்தில் மீண்டும் அமெரிக்கா செல்ல விசா கோரியிருந்தார் மோடி. அப்போதும் அவருக்கு விசா தர அமெரிக்கா மறுத்து விட்டது.
இந்த நிலையில் மோடியின் பெயர் தொடர்ந்து நெகட்டிவ் லிஸ்ட்டில் இருப்பதாக அமெரிக்க சட்ட விவகாரத்துறை துணை அமைச்சர் மாத்யூ ரேனால்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மோடி செய்த மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறையும், சட்டத் துறையும் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளன. எனவே அவரது பெயர் தொடர்ந்து நெகட்டிவ் லிஸ்ட்டில் இடம் பெற்றுள்ளது.
மோடி விசா கேட்டு விண்ணப்பிக்கவில்லை. ஒரு வேளை விண்ணப்பித்தாலும் அவருக்கு விசா கிடைப்பது கடினம் என்றார் அவர்.


Click it and Unblock the Notifications
