திருச்சியில் அதிமுக-தேதிமுக மோதல்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சியில் தேமுதிகவினர் வைத்த கொடிமரம் மற்றும் கல்வெட்டை அதிமுகவினர் அகற்றியதால் அங்கு இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.

திருச்சி உரையூர் கோணக்கரை மாயானத்திற்கு செல்லும் வழியில் எம்ஜிஆர் பங்களா உள்ளது. இந்திரா நகர் தேமுதிக சார்பில் எம்ஜிஆர் பங்களாவில் கல்வெட்டு, கொடி கம்பம் ஆகியவை நிறுவப்பட்டது.

ஆனால் அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என்று கூறி தேமுதிகவினர் வைத்திருந்த கொடி கம்பம், கல்வெட்டை அதிமுகவினர் அகற்றி்யதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த தேமுதிகவினர் அதே இடத்தில் கொடி கம்பம், கல்வெட்டை ஆகிவற்றை மீண்டும் வைத்தனர்.

இதையறிந்த அதிமுகவினர் அங்கு குவிந்தனர். இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கைகலப்பாகும் சூழல்நிலை ஏற்பட்டது. இதனால் அங்கு பதட்டம் உருவானது. இதுகுறித்து தகவல் அறிந்த உறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர். அவர்களை சமரசம் செய்து போலீஸார் அனுப்பியதை அடுத்து அங்கு அமைதி திரும்பியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+