அதிமுக பொது செயலாளர் பதவிக்கு தேர்தல்!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது. செப்டம்பர் 10ம் தேதி தேர்தல் நடைபெவுள்ளதாம்.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட ஜெயலலிதா தொடர்ந்து அப்பதவியில் இருந்து வருகிறார். இந்த நிலையில் தேர்தல் கமிஷனின் விதிக்கு உட்பட்டு அப்பதவிக்கு வருகிற 10ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் கடந்த 10.9.2003 அன்று நடைபெற்றது.
அதிமுக சட்டதிட்ட விதி 30, பிரிவு 2ன் படி, அதிமுக அமைப்புகளின் பொதுத் தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்திட வேண்டும் என்ற விதிமுறைக்கேற்ப, அதிமுக பொதுச் செயலாளர் பொறுப்புக்கான தேர்தல் கீழ்க்கண்ட அட்டவணைப்படி நடைபெற உள்ளது.
தேர்தல் ஆணையாளராக விசாலாட்சி நெடுஞ்செழியன் செயல்படுவார்.
வேட்புமனு தாக்கல் 2.9.2008 செவ்வாய்க்கிழமை தொடங்கி 7.9.2008 ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும். அந்த நாட்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.
வேட்பு மனு பரிசீலனை: 8.9.2008 திங்கட்கிழமை.
வேட்பு மனு திரும்பப் பெறுதல்: 9.9.2008 செவ்வாய்க்கிழமை.
தேர்தல் நாள்: 10.9.2008 புதன்கிழமை.
தேர்தல் முடிவு அறிவிப்பு: 10.9.2008 புதன் கிழமை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications