ஜி.கே.மணி மகன் கல்யாணம்-நடத்தி வைத்த ராமதாஸ்-ஜெ. வரவில்லை

ஜி.கே. மணி - சுந்தராம்பாள் தம்பதியின் மகன் தமிழ்க்குமரனுக்கும், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் வலசை இரா. சந்திரசேகர் - பத்மாவதி தம்பதியின் மகள் சத்யாவுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.
திருமணம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் று நடந்தது. டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.
தமிழ்முறைப்படி முதலில் மணமகன் மற்றும் மணமகளை ராமதாஸ் அறிமுகப்படுத்தினார். அதைத் தொடர்ந்து தாய் மாமன் மணமகளுக்கும் மணமகனுக்கும் மாலை அணிவித்தனர்.
பின்னர் மணமக்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதைத் தொடர்ந்து டாக்டர் ராமதாஸ் மற்றும் பெரியவர்கள் தாலி எடுத்து கொடுக்க அதை சத்யா கழுத்தில் மணமகன் கட்டினார். பின்னர் மணமக்களை வாழ்த்தி டாக்டர் ராமதாஸ் பேசினார்.
அவர் பேசுகையில், இந்த திருமணம் தான் தமிழ்வழி திருமணம். இப்படித்தான் தமிழர்கள் திருமணம் நடந்தது. இன்றும் தென் மாவட்டங்களில் பெரியவர்கள் ஆசீர்வதிக்க இதே முறைப்படிதான் திருமணம் நடைபெறுகிறது.
மணமக்களுக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம் மக்கள் தொகை பெருக்கத்தை நினைத்து கொள்ள வேண்டும்.
ஒன்று அல்லது 2 குழந்தைகள் போதும்:
ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் போதும். மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக இந்தியாவில் 3 வேளையும் வயிற்றுக்கு சாப்பிட முடியாத நிலையில் கோடிக்கணக்கான பேர் உள்ளனர்.
அனைவருக்கும் கட்டாய கல்வி, கட்டணம் இல்லாத கல்வி, தரமான கல்வி, கிடைக்க வேண்டும்.
சமூகத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு மிக முக்கிய காரணம் கல்வி அறிவு இல்லாததுதான்.
நல்ல குழந்தைகளை உருவாக்கும் பொறுப்பு பெற்றோர்களுக்கும் உள்ளது. நல்ல குடிமக்களை உருவாக்கினால்தான் நாடு முன்னேறும். குடிக்கும் இளைஞர்களை உருவாக் கினால் நாடு உருப்படுமா.
இன்னும் 5 ஆண்டுகளில் குடிக்காத இளைஞர்களே இருக்க மாட்டார்கள் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. குடி, குடியை கெடுக்கும் என்று சொல்லி விட்டு வருமானத்திற்காக அரசே மதுக்கடையை திறக்கிறது.
12-ம்வகுப்பு வரை அனைவருக்கும் கட்டாய கல்வி வழங்க வேண்டும். இடையில் படிப்பை நிறுத்தும் பெற்றோருக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.
வறுமையை ஒழிப்போம் என்று 50 ஆண்டுகளாக எழுப்பும் கோஷம் வெற்று கோஷமாகி விட்டது. அனைவருக்கும் கல்வி, வேலை கொடுங்கள்.
50 அல்லது 100 ஏக்கர்களில் அதுவும் விளைநிலம் இல்லாத இடங்களில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாகட்டும்.
வேலையை கொடுத்து மக்களின் வாங்கும் சக்தியை அதிகரியுங்கள். இப்போதைய சூழ்நிலையில் மக்கள் அரசிடம் கையேந்தி நிற்கிறார்கள்.
தமிழ்நாட்டில் 4 கோடி பேர் வறுமையில் உள்ளனர். தொழில் வளர்ச்சியில் முன்னேறிய 10 மாநிலங்களின் வரிசையில் தமிழகம் இடம் பெறவில்லை.
இதற்கு காரணம் நம்நாடு, நம்மக்கள் என்ற எண்ணத்தோடு திட்டங்களை தீட்டி செயல் படுத்தாததுதான்.
பெண்களுக்கு சம வாய்ப்பு சமஅந்தஸ்து கொடுக்க வேண்டும்.
பண்பாட்டு சீர ழிவில் இருந்து மக்களை மீட்கத்தான் பா.ம.க.போராடி வருகிறது. காலை முதல் மாலை வரை மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
கல்வியை தனியாரிடம் கொடுத்து விட்டு மதுபான கடைகளை அரசே நடத்துவது அதிர்ச்சி அளிக்கிறது.
எங்கள் கட்சியில் குடிப்பவர்களை சேர்ப்பது இல்லை. ஒழுக்கம்தான் முக்கியம். குடிக்கும் தொண்டன் எங்களுக்கு தேவை இல்லை என்றார் அவர்.
மத்திய அமைச்சர்கள் அன்புமணி, வேலு, முனியப்பா, முன்னாள் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, டி.சுதர்சனம், அருண்குமார் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.
திரண்டு வந்த திரையுலகம்:
திரையுலகுக்கு எதிரான கட்சி பாமக என்று கூறப்பட்ட போதிலும் மணி மகன் கல்யாணத்திற்கு திரையுலகினர் பெருமளவில் வந்திருந்தனர்.
நடிகர்கள் சிவக்குமார், நெப்போலியன், ஜெயம்ரவி, பாண்டியராஜன், டைரக்டர் சீமான், ஆர்.பி.சவுத்ரி, நடிகை பூமிகா உள்ளிட்டோர் வந்திருந்தனர்.
அதிமுக பிரமுகர்கள்:
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம், திருத்தணி அரி எம்.எல்.ஏ., பள்ளிப்பட்டு நரசிம்மன், பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், ஐகோர்ட்டு நீதிபதிகள் ரவிராஜபாண்டியன், நாகப் பன், வெங்கட்ராமன், குணசேகரன், பா.ம.க.எம்.பி.க்கள், ஏ.கே.மூர்த்தி, செந்தில், ராமதாஸ், உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
முன்னதாக திருமண வரவேற்பு நேற்று மாலை நடந்தது. இதில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.
மத்திய அமைச்சர்கள் அன்புமணி ராமதாஸ், சுஷில் குமார் ஷிண்டே, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஜி.கே.வாசன், நாராயணசாமி, ஆர்.வேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
நடிகர்கள் சத்யராஜ், ஜெயம் ரவி, முரளி, விஜயக்குமார், மன்சூர் அலிகான், ரமேஷ் கண்ணா, ரஜினிகாந்த் ரசிகர் மன்றத் தலைவர் சத்தியநாராயணன், இயக்குநர்கள் சீமான், ஆர்.வி.உதயக்குமார், முத்துராமன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
ஜெ. வரவில்லை:
இந்த திருமணத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதன்மூலம் அதிமுக-பாகம கூட்டணிக்கு அடி போடப்படலாம் என்று கூறப்பட்டது.
ஆனால், ஜெயலலிதாவின் பெயரை மணி பத்திரிக்கையில் இடவில்லை. இந் நிலையில் திருமணத்துக்கு ஜெயலலிதா வரவில்லை. நேற்றைய திருமண வரவேற்புக்கும் அவர் வரவில்லை.
-
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications