கஸ்டவ் சூறாவளி நெருங்குகிறது-அமெரிக்காவில் உஷார் நிலை

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இதே நியூ ஆர்லியான்ஸ் நகரைத்தான் காட்ரீனா சூறாவளி உலுக்கி எடுத்தது என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் புதிதாக உருவாகியுள்ள கஸ்டவ் சூறாவளியால் மீண்டும் நியூ ஆர்லியான்ஸுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய சூறாவளி என கஸ்டவை, நியூ ஆர்லியான்ஸ் நகர மேயர் ரே நர்கின் வர்ணித்துள்ளார். சூறாவளி நெருங்கி வருவதைத் தொடர்ந்து நியூ ஆர்லியான்ஸ் நகர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகின்றனர்.
ஏற்கனவே கியூபா, ஜமைக்காவை புரட்டிப் போட்ட இந்த சூறாவளிக்கு 82 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஏற்கனவே காட்ரீனா பாதிப்பை சந்தித்துள்ள நியூ ஆர்லியான்ஸ் மக்கள் கஸ்டவ் சூறாவளியால் என்ன பாதிப்பு ஏற்படப் போகிறதோ என்ற அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
2005ம் ஆண்டு நியூ ஆர்லியான்ஸை காட்ரீனா தாக்கியதில் 85 சதவீத நகரம் பெரும் பாதிப்பை சந்தித்தது. 1500 பேர் உயிரிழந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
தற்போது நியூ ஆர்லியான்ஸ் நகர் முழுவதும் காஸ், பெட்ரோல் சப்ளை முற்றிலும் தீர்ந்து போய் விட்டது. மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர், வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
அலபாமா முதல் டெக்ஸாஸ் வரை கஸ்டவ் சூறாவளி தாக்கக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சூறாவளி காரணமாக மின்னசோட்டாவின் செயின்ட் பால் நகரில் இன்று தொடங்கவிருந்த குடியரசுக் கட்சி தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications